டேவிட் வார்னர்
34 வயதாகும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இவர் ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று பல இக்கட்டான நிலையிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் வருகிற 2021 டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக திகழ காத்திருக்கும் டேவிட் வார்னர் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 சதங்களை அடித்து அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளார்.
