கிரிக்கெட் போட்டியின் மிக பழமை விதமான போட்டி தான் டெஸ்ட் கிரிக்கெட், இதனால் அடுத்து வரும் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் அறிமுகம் ஆனது முதல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது இருந்த ஒரு ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பார்க்கவே கிரிக்கெட் மைதானங்கள் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், இப்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் வந்த பிறகு, சூழ்நிலை மாறி விட்டது.
இந்த காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்கள் கூட டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாமல் டி20 போட்டிகளிலேயே விளையாடுகின்றனர்.
மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக அளவில் கூட்டத்தை சேர்க்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் மற்ற அணிகளில் கிரிக்கெட் வாரியங்கள் முயற்சிக்கின்ற போது, அவர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உதவி செய்கிறார். தற்போது உலகின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரராக இருக்கும் கேப்டன் விராட் கோலி, நவம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதை பற்றி பேசினார்.
The third Test cricket match between India and Sri Lanka starts in Pallekele on August 12. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
“இங்கு உன்முக்த் சந்த் மட்டும் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால், நான் அனைவருக்கும் சொல்ல நினைக்கிறன், அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட் மீது கவனம் செலுத்துங்கள். டெஸ்ட் கிரிக்கெட் தான் பழமையான போட்டி. இந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் தத்தளித்து கொண்டு இருக்கிறது. இந்த நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த வேண்டும்,” என விராட் கோலி கூறினார்.
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிஷான் சிங் பேடி, ஐபில்-இல் விளையாட சில வீரர்கள் முதல்-தர போட்டிகளில் விளையாட மாட்டுகிறார்கள் என கூறினார்.
“எங்கள் காலத்தில், இந்திய அணிக்கு நிகராக ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் டிராபி இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் இளைஞர்கள் இந்தியன் பிரீமியர் லீக் அணிகளுடன் ஒப்பந்தம் செய்ய முதல் தர போட்டிகளில் விளையாட மாட்டுகிறார்கள். இந்திய அணிக்கு விளையாட முடியவில்லை என்றால், ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும். இப்போது இந்திய வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது,” என பிஷான் பேடி கூறினார்.