இந்திய கிர்க்கெட் அணியை மான் கீ பாத் உரையில் பாராட்டிய பிரதமர் மோடி !! 1
இந்திய கிர்க்கெட் அணியை மான் கீ பாத் உரையில் பாராட்டிய பிரதமர் மோடி

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் போது பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட இந்திய கிர்க்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியா – ஆப்கானிஸ்தான் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால், கோப்பை வழங்கப்பட்ட பின்னர், போட்டோவுக்கு போஸ் கொடுக்கையில், இந்திய அணி கேப்டன் ரஹானே, ஆப்கான் வீரர்களையும் அழைத்தார்.

இந்திய கிர்க்கெட் அணியை மான் கீ பாத் உரையில் பாராட்டிய பிரதமர் மோடி !! 2

இந்த செயல் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய அணியின் இந்த செய்கையை பாராட்டி பேசினார். சமுதாயத்தை ஐக்கியப்படுத்தவும், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் விளையாட்டு சிறந்த வழியாகும் என அவர் கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியதற்கு நாம் பெருமை பட வேண்டும். அந்த அணியின் வீரர் ரஷித்கான் உலக கிரிக்கெட்டின் சொத்து, அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார் என மோடி பேசினார்.

இந்திய கிர்க்கெட் அணியை மான் கீ பாத் உரையில் பாராட்டிய பிரதமர் மோடி !! 3

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சியாச்சின் உச்சி, போர்க்கப்பல்கள், ஆகாயம் மற்றும் நீர் என அனைத்து இடங்களிலும் நமது வீரர்கள் யோகா செய்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் எனவும் மோடி கூறினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *