பொல்லார்டு செய்த இந்த செய்லால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ! கடுப்பான முகமது ஷமி ! 1

பொல்லார்டு செய்த இந்த செய்லால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ! கடுப்பான முகமது ஷமி !

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. நேற்று (ஏப்.23) நடைபெற்ற 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்நியன்ஸ் அணியும் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பொல்லார்டு செய்த இந்த செய்லால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ! கடுப்பான முகமது ஷமி ! 2

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ளே முடிவில் 21 ரன்கள் மட்டும் குவித்து 1 விக்கெட் இழந்திருந்தது. மும்பை பேட்ஸ்மன்களை பஞ்சாப் பவுலர்கள் திணற வைத்தனர். தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த போது கேப்டன் ரோகித் சர்மா 63 ரன்கள், சூரியகுமார் யாதவ் 33 ரன்கள் மற்றும் பொல்லார்டு 16 ரன்கள் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 131 ரன்கள் மட்டும் குவித்தது.

பஞ்சாப் பவுலர்கள் முகமது ஷமி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். பவர்பிளேவில் 46 ரன்கள் குவித்து விக்கெட் இழக்காமல் இருந்தனர்.

பொல்லார்டு செய்த இந்த செய்லால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ! கடுப்பான முகமது ஷமி ! 3

இதன்பிறகு ராகுல் சஹார் ஓவரில் விக்கெட் இழந்து வெளியேறிய மயங்க் அகர்வாலுக்கு (25) பிறகு கிறிஸ் கெயில் களமிறங்கினார். ராகுல் மற்றும் கெயில் ஜோடி சேர்ந்து போட்டியை முடித்து வைத்தனர். ராகுல் 60 ரன்கள் மற்றும் கெயில் 43 ரன்கள் குவிக்க பஞ்சாப் அணி 17.4வது ஒவரிலே 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கண்டது. பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இதன்மூலம் பஞ்சாப் அணி தற்போது 4 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பொல்லார்டு செய்த இந்த செய்லால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ! கடுப்பான முகமது ஷமி ! 4

இந்நிலையில், இந்த போட்டியில் முதல் இன்னிஸ்சின் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். அப்போது நாண்-ஸ்ட்ரைக்கராக இருந்த பொல்லார்டு முகமது ஷமி பந்தை போட்டுவதற்குள் கிரீஸை விட்டு வெளிவந்து ஒரு ரன் எடுக்க முயன்றார். பொல்லார்டின் இந்த செயலை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *