விருத்திமான் சஹா விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் கே எல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி விருத்திமான் சஹா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார்.

ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது நாள் ஆட்டத்தை 15-வது ஓவரில் பும்ரா வீசிய 3வது பந்தை எதிர்கொண்ட மார்னஸ் லபஸ்சக்னெ தடுமாற்றத்துடன் எதிர்கொண்டார்.
பந்து பேட்டில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் நோக்கி சென்றது. இதை புஜாரா எளிதாக பிடித்திருப்பார் ஆனால் சாஹாவின் குறுக்கீட்டால் அந்த கேட்ச் வாய்ப்பு தவற விட்டது.

இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது, சகா மிகவும் கவனக்குறைவாக செயல்படுவதாக கூறினார்.