ஐபிஎல் தொடர் கைவிடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! 1

டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடத்தியது தான் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற தொடங்கியது. சென்னை மற்றும் மும்பை மாநகரங்களில் வைத்து ஒரு சுற்று நடத்தப்பட்டது. அந்த சுற்று மிக பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தது. அதற்கு அடுத்த சுற்றுகள் டெல்லி மற்றும் அகமதாபாத் மாநகரங்களில் வைத்து பிசிசிஐ நடத்தியது. அங்கே நடத்த போய்தான் ஐபிஎல் அணியில் விளையாடிய வீரர்களுக்கு கொரோனா தொற்று தொற்றிக் கொண்டது என பிசிசிஐ அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

நிச்சயமாக டெல்லி மற்றும் அகமதாபாத் மாநகரங்களில் அடுத்த சுற்று பணத்தை இருக்கக்கூடாது அங்கே நடத்தியதன் காரணமாக தான் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்படும் கட்டாயம் ஏற்பட்டதாக விளக்கமளித்தனர்.

Narendra Modi Stadium, Ahmedabad

டெல்லி மற்றும் அகமதாபாத்தில் அதிக அளவில் இருந்தால் கொரோனா எண்ணிக்கை

நான்கு அணிகள் டெல்லியிலும் மீதமுள்ள நான்கு அணிகள் அகமதாபாதில் விளையாடுவதுபோல் பிசிசிஐ முடிவெடுத்தது. டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்திலும் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

அங்கே விளையாடும் அணிகள் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக அந்தந்த ஊர்களில் இருந்த சிறிய மைதானங்களை எடுத்துக் கொண்டனர். அகமதாபாத்தில் விளையாடிய அணிகள் குஜராத் கல்லூரி மைதானங்களில் தங்களது பயிற்சியை மேற்கொண்டனர். டெல்லியில் விளையாடிய அணிகள் அங்கு இருந்த கிளப் மைதானங்களில் தங்களது பயிற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் விளையாடிய பயிற்சி மைதானங்களில் இருந்த சப்போர்ட் ஸ்டாஃப்கள் மற்றும் வேலை ஆட்களுக்கு குருணை தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அணியில் இருந்த வீரர்களுக்கு நிச்சயமாக கொரோனா பரவி உள்ளது என தற்பொழுது தெரிய வந்துள்ளது.

Arun Jaitley Stadium, Delhi

டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ஐபிஎல் போட்டி நடத்தி இருக்கக்கூடாது

பிசிசிஐ அணி செய்த மிகப்பெரிய தவறு டெல்லி மற்றும் அகமதாபாத் மாநகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தியது தான். அங்கே கொரனோ எண்ணிக்கை அதிக அளவில் ஒவ்வொரு நாளுக்கு அதிகரித்து கொண்டே வந்த வேளையில், நிச்சயமாக அங்கே ஐபிஎல் போட்டிகளை நடத்தி இருந்திருக்கக் கூடாது. அப்படி நடத்தி இருந்தாலும் வீரர்களை பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக வழிநடத்தி இருந்திருக்க வேண்டும். அதை செய்ய தவறு இதன் மூலமாக வீரர்களுக்கு தொற்று பரவியது. இதன் காரணமாக தான் தற்பொழுது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுளது என தற்போது தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *