கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு; பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம்? 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் டிரா செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெரும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு; பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம்? 2

பேட்ஸ்மேன்கள் வரிசையில் துவக்க வீரர்களாக ஏற்கனவே விளையாடி வரும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடர்ந்து நீடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் எவ்வித மாற்றமும் இன்றி புஜாரா மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்குவர். அதேபோல கீழ் வரிசையில் ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தொடர்ந்து ஆடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சில் அசத்திய அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஜோடி தொடர்ந்து விளையாடுவர். மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியிலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால் இத்தகைய கணிப்பு இடம்பெற்றிருக்கிறது.

கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு; பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம்? 3

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை இசாந்த் சர்மா தொடர்ந்து விளையாடினாலும், மூன்றாவது போட்டியில் ஆடிய பும்ரா தனது சொந்த காரணங்களுக்காக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் உள்ளே கொண்டுவர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்று இருப்பதால் அவருக்கும் இடம்கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றது. நமது கணிப்பின்படி, சிராஜ் இந்த உத்தேச அணியில் இடம் பிடிக்கிறார்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு; பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம்? 4

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *