தனி ஆளாக போராடிய தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஆளாக போராடி அரைசதமும் அடித்த வாசிங்டன் சுந்தருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (28) மற்றும் சுப்மன் கில் (13) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்ததாக களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் (10), சூர்யகுமார் யாதவ் (6) மற்றும் தீபக் ஹூடா (12) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர்.
இதன்பின் 7வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் தனி ஆளாக போராடி 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 47.3 ஓவரில் 219 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே மற்றும் டேரியல் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் என சீனியர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதிலும், தனி ஆளாக நீண்ட நேரம் போராடி அரைசதமும் அடித்த வாசிங்டன் சுந்தருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் வாசிங்டன் சுந்தரை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அதில் சில;
Washington Sundar today 😎 pic.twitter.com/BJEUF0kLGM
— prime video IN (@PrimeVideoIN) November 30, 2022
Washington Sundar in Int'l cricket:
62(144) & 22(29) – In Gabba in Test.
85*(138) vs England in Tests.
96*(174) vs England in Tests.
37*(16) in NZ in ODIs.
51(64) in NZ in ODIs.In just small sample size in Int'l cricket washi showed how good he is with bat. pic.twitter.com/MosPu9gXH0
— CricketMAN2 (@ImTanujSingh) November 30, 2022
Keeping the game alive! 🔥
🇮🇳2️⃣1️⃣9️⃣#NZvIND #WhistlePodu 🦁💛
📸: @BCCI pic.twitter.com/o0Y28TFNkX— Chennai Super Kings (@ChennaiIPL) November 30, 2022