பிளேயிங் லெவனில் மாற்றம்.. 3வது டி20 போட்டியில் முக்கிய வீரர் வெளியே - ரிப்போர்ட்! 1

மூன்றாவது டி20 போட்டியின் போது பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கின்றது. மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிளேயிங் லெவனில் மாற்றம்.. 3வது டி20 போட்டியில் முக்கிய வீரர் வெளியே - ரிப்போர்ட்! 2

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இந்த தொடரில் ஷுப்மன் கில் 7 ரன்கள் மற்றும் 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இஷான் கிஷன் 5 ரன்கள் மற்றும் 19 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

நல்ல ஃபார்மில் இருக்கும் பிரித்வி ஷா வெளியில் அமர்ந்திருக்கிறார். இவர்கள் இருவரில் ஒருவரை வெளியில் அமர்த்தி விட்டு பிரித்வி ஷாவை பிளேயிங் லெலவனுக்கு எடுத்து வரலாம் என்கிற விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பிளேயிங் லெவனில் மாற்றம்.. 3வது டி20 போட்டியில் முக்கிய வீரர் வெளியே - ரிப்போர்ட்! 3

ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரில் யாரை வெளியில் அமர்த்துவார்கள்? என்று சந்தேகங்கள் ஒரு பக்கம் இருந்து வருகிறது. ஷுப்மன் கில்லுக்கு இது 6வது டி20 போட்டியாகும். ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதை டி20 போட்டிகளிலும் விரைவாக கொண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு அவர் மீது இருக்கின்றது.

அதேநேரம் இஷான் கிஷன் கிட்டத்தட்ட 13 டி20 போட்டிகளில் அரைசதம் அடிக்கவில்லை. இதனால் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியில் இஷான் கிஷன் வெளியில் அமர்த்தப்பட்டு பிரித்வி ஷா உள்ளே எடுத்து வரப்பட உள்ளார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

பிளேயிங் லெவனில் மாற்றம்.. 3வது டி20 போட்டியில் முக்கிய வீரர் வெளியே - ரிப்போர்ட்! 4

பிரித்வி ஷா, கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு காயம் மற்றும் சில காரணங்களுக்காக சர்வதேச போட்டிகளில் இடம்பெற முடியவில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த இவருக்கு இரண்டரை வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

ஆனாலும் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஓபனிங்கில் நன்றாக விளையாடி வந்ததால், பிரித்வி ஷாவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *