சூரியகுமார் யாதவை இந்த லிஸ்டில் சேர்க்கமுடியாது ; 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் 5 வீரர்கள் இவர்கள் தான் ; சவுரவ் கங்குலி சொல்கிறார்..
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் இந்த ஐந்து இளம் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த தொடர்களில் மிகப் பிரபல்யமான ஐபிஎல் தொடர், உலக அளவில் இருக்கும் அதிக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற தொடர்களை விட அதிக பணம் புழங்கும் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடர் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் இதற்கென உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு அணியும் தன் சொந்த மைதானத்தில் விளையாடாமல் பல கட்டுப்பாடுகளோடு நடந்த நிலையில் , இந்த வருடம் அப்படி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஒவ்வொரு ஆணியும் தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடிக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
குறிப்பாக 2023 ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடர் குறித்தான சுவாரஸ்யமான தகவல்கள் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீர சௌரவ் கங்குலி எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் ஐந்து வீரர்கள் குறித்து ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில்,“இந்த தொடரில் எப்பொழுதும் போல் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக செயல்படுவார் ஆனால் அவரை இன்னும் இளம்வீரராக நாம் கருத முடியாது. அதை தவிர்த்து டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் பிரித்வி ஷா.,2023 ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படு்த்துவார்.மேலும் அவரை தொடர்ந்து ரிஷப் பண்டும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார், அவருக்கு தற்பொழுது வெறும் 23 வயது தான் ஆகிறது, இப்பொழுது அவர் இந்த ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் காலுக்கு கீழ் கொண்டு வந்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக ருத்ராஜ் கெய்க்வாட்டை கூறுகிறேன் இவர்களைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்படுவார் என கங்குலி தெரிவித்திருந்தார்.
அப்பொழுது குறிப்பிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்தப் பெயர் பட்டியலில் சுப்மன் கில்லை மறந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கங்குலி., “நிச்சயம் இந்த வரிசையில் அவருடைய பெயரும் உள்ளது, ஆனால் நான் அதை கூறுவதற்கு மறந்து விட்டேன். இந்த வரிசையில் ஐந்தாவது வீரராக நான் அவரை தான் சொல்ல விரும்புகிறேன்” என்று கங்குலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.