சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியை சேர்ந்த முத்தையா முரளிதரன் ஆவார். அவர் தற்போது இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுது இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் விளையாடுவது போல உள்ளது என்று தற்போது கூறியுள்ளார்.
இந்தியன் நிர்வாகம் பிரித்வி ஷாவை அவரது இயல்பான போக்கில் விளையாட வைக்க வேண்டும்
பிரித்வி ஷா அடிப்படையில் அதிரடியாக விளையாடும் ஒரு வீரர். டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த ஆண்டு நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் அவர் மொத்தமாக 827 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 165.4 ஆகும்.

இதைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக எட்டு போட்டியில் விளையாடிய பிரித்வி ஷா 308 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் தற்போது 166.49 ஆக உள்ளது. எனவே இந்திய நிர்வாகம் இவரை இவருடைய இயல்பான போக்கிலேயே இனிவரும் காலங்களில் எப்பொழுதும் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் முத்தையா முரளிதரன் தற்பொழுது அறிவுறுத்தி உள்ளார்.
வீரேந்திர சேவாக் போல பல மாயாஜாலங்களை செய்து காட்டுவார்
விரேந்திர சேவாக் அடிப்படையில் அமைதியாக விளையாடும் வீரர் கிடையாது. போட்டி ஆரம்பித்த வினாடியிலேயே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டத் துவங்கி விடுவார். கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மிக சிறிய கால அளவிலேயே அணிக்கு நிறைய ஸ்கோர்களைப் பெற்றுத் தருவார்

கிட்டத்தட்ட வீரேந்திர ஷேவாக் அதிரடியாக விளையாடுகிறார் அதே ஆட்டத்தை தான் தற்பொழுது பிரித்வி ஷா விளையாடி வருகிறார். எனவே இவரை இந்திய நிர்வாகம் இதே போக்கில் விளையாட அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்கப்படுவதன் மூலமாக இந்திய அணிக்கு மிகக் குறுகிய கால அளவிலேயே நிறைய ரன்கள் வந்து சேரும். அது இந்திய அணியின் வெற்றியை நிச்சயமாக உறுதிப்படுத்தும். எனவே இதை இந்திய நிர்வாகம் தனது எண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று முத்தையா முரளிதரன் தற்பொழுது வலியுறுத்தியுள்ளார்.