டிராவிட் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றும் ப்ரிதீவ் ஷா
பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்ன ஆலோசனையின் படியே விளையாடி வருகிறேன் என்று பிருத்வி ஷா சொன்னார்.
தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணி யுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியி ல் பங்கேற்றுள்ளது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக் கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர் வால் 250 பந்துகளை சந்தித்து 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். மூன்றாவது நாள் இன்று ஆட்டம் நடக்கிறது.
சதம் அடித்தது பற்றி கூறிய பிருத்வி ஷா, தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அதிக பங்கு உண்டு என்றார். பிருத்வி ஷா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்தவர். அப்போது அவருக்கு பயிற்சியாளராக இருந்தது டிராவிட். இப்போது இந்திய ஏ அணியில் பிருத்வி இடம்பெற்றுள்ளார். இதன் பயிற்சியாளராகவும் டிராவிட் இருக்கிறார். சமீபத்தில் இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணி விளையாடியது. அந்த தொடரில் பிருத்வி ஷா அபாரமாக ஆடினார்.