தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸின் அதிவேக சத சாதனையை, இந்தியாவின் புரோலு ரவிந்திர சர்வ சாதாரணமாக தகர்த்தார்.
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் உலக சாதனை, வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் சாதனைகளை இந்தியாவின் புரோலு ரவிந்திர அசால்ட்டாக தகர்த்தார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 37 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதித்தார், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி. இவரின் சாதனையை நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் (36 பந்துகள்) தகர்த்தார். இந்த சாதனையை தென் ஆப்ரிக்க கேப்டன் மிஸ்டர் 360 டிவிலியர்ஸ் (31 பந்துகள்) பின்னர் முறியடித்தார்.
தவிர, இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் (30 பந்துகள்) கிரிக்கெட் அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதித்தார். ஆனால் ஜூலை மாதம் 29 ஆம் தேதி கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த உள்ளூர் போட்டியில் இவர்களின் சாதனையை இந்தியாவின் புரோலு தகர்த்தார்.
இப்போட்டியில் 58 பந்தில் 144 ரன்கள் விளாசிய புரோலு, 29 பந்தில் சதம் கடந்து அசத்தினார். இவர் மொத்தமாக 13 சிக்சர், 4 பவுண்டரி அடித்து அசத்தினார். இப்படி ருத்ர தாண்டவம் ஆடிய புரோலு தான் ஆடிய ஜிம்கானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 403 ரன்கள் குவிக்க உதவினார். பின்னர் ஆடிய ஜெய்ப்பூர் கிளப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 229 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதி வேகமாக சதம் கடந்த புரோலு ரவிந்திரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து புரோலு கூறுகையில்,இந்திய அதிரடி மன்னன் சேவக் தான் எனது ரோல் மாடல். நான் 10ம் வகுப்பு படித்து முடித்தபின் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. எனது பெற்றோர்களுக்காக குறைந்தபட்சம் ஐபிஎல்., தொடரிலாவது சாதிக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு.’ என்றார்.
தற்போது இந்த சாதனை கிரிக்கெட்டின் அனைத்து மட்டத்தில் இருக்கும் அதிவேக சதங்களை ஊதி தள்ளி விட்டு முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இந்த அதிவேக சதம் சர்வதேச அளவிலான சாதனையாக பதிவு செய்ய படாது. இதற்கு முன்பு முன்னர் டெல்லியில் நடத்த இருபது ஓவர் போட்டியில் மோகித் அஹலவாட் அடித்த முச்சதமே சாதனையாக இருந்தது. ஆனால் அதற்கு போதிய சான்றுகளும், பதிவு செய்யப்பட்ட தரவுகளும் இல்லை. ஆகவே புரோலு ரவிந்திரா படைத்த இந்த சாதனை கிரிக்கெட்டின் அனைத்து மட்டத்தில் இருக்கும் அதிவேக சதங்களை ஊதி தள்ளி விட்டு முதல் இடத்தில் உள்ளது.
திறமை வாய்ந்த பல இளம் வீரர்கள் இது போன்ற பல போட்டி தொடரில் தரம் காணப்படுகிறார்கள். இவர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பும் அதற்கேற்ற அமையும் கிடைத்தால் இந்தியா அணிக்கு இன்னும் பல சேவாக்குகளும், தோனிகளும் கிடைக்க பெறுவார்கள் என்பது நிச்சயம்.