ஐபிஎல் தொடரில் பந்து வீச்சு மொக்கையாக இருக்கும்; தேவையில்லாமல் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் !! 1

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து ஆகிப் ஜாவித் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடர் மற்றும் பிஎஸ்எல் தொடர் குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதிக பணம் புழங்கும் உலகின் பிரபல்யமான தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் பங்கு கொள்ள வேண்டுமென்பதற்காக உலகின் பல்வேறு நாட்டிலிருக்கும் வீரர்களும் ஆசைப்படுவார்கள் மேலும் இந்த ஐபிஎல் தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் தேர்வாகுவதற்கு உதவியாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் பந்து வீச்சு மொக்கையாக இருக்கும்; தேவையில்லாமல் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் !! 2

அப்படியிருந்தும் இந்த ஐபிஎல் தொடர் குறித்த விமர்சனங்களும் சில கிரிக்கெட் வல்லுனர்களால் முன்வைக்கப் படுகிறது, உதாரணமாக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு ஐபிஎல் தொடர் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவித் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது ஐபிஎல் தொடர் குறித்தான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பந்து வீச்சு மொக்கையாக இருக்கும்; தேவையில்லாமல் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் !! 3

அதில், ஐபிஎல் தொடர் எப்பொழுதும் விளையாடும் சாதாரண ஒரு போட்டியாகவே காணப்படுகிறது அங்கு இருக்கும் மைதானம் காரணமாக பந்துவீச்சு அந்த அளவிற்கு தரமானதாக இல்லை, ஆனால் பிஎஸ்எல் தொடர் உலகின் சுவாரஸ்யமான போட்டிகளில் ஒன்றாக திகழ்கிறது, குறிப்பாக பிஎஸ்எல் தொடர் நடக்கும் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கிறது, குறிப்பாக லாகூர் மைதானத்தில் நீங்கள் அதிக ஸ்கோர் என்ன என்பதை வைத்து இதை தீர்மானிக்கலாம் என்று ஆகிப் ஜாவித் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவருடைய கருத்து வேடிக்கையாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *