இவர் மட்டும் நன்றாக ஆடினால் இந்திய அணி வெல்ல பெரிய வாய்ப்புகள் உள்ளது! விவி ராமன் 1

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவி ராமன் தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி கொடுத்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்திய அணி நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்று விடும் என்றும், புஜாரா நிச்சயமாக அதனுடைய இயல்பான ஆட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணி நிச்சயமாக சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது

கடந்த ஐந்து வருடங்களாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முதல் அணியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடைசியாக நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்திய வீரர்கள் அனைவரும் மனதளவில் சிறப்பாக செயல்பட்டு விளையாடினார்கள் அவர்களுக்கு கிடைத்த பரிசு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு என்று கூறியுள்ளார். நிச்சயமாக இந்திய அணி அதனுடைய முழு பலத்தை காண்பித்து இறுதிப் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவர் மட்டும் நன்றாக ஆடினால் இந்திய அணி வெல்ல பெரிய வாய்ப்புகள் உள்ளது! விவி ராமன் 2

புஜாரா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்

மேலும் பேசிய அவர் இங்கிலாந்து மைதானங்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்கள் போல் கிடையாது அது எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும். வானிலை பொறுத்து இங்கிலாந்து மைதானங்கள் நிறைய மாறி இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

எனவே பந்துவீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்துவீச கூடிய மைதானங்கள் ஆக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் பொறுமையாக நிதானமாக நின்று விளையாட வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியாவில் அதில் மிக கைதேர்ந்த வீரர் புஜாரா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிந்தவரை நிறைய நேரம் விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்

இவர் மட்டும் நன்றாக ஆடினால் இந்திய அணி வெல்ல பெரிய வாய்ப்புகள் உள்ளது! விவி ராமன் 3

விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாட வேண்டும்

ரோகித் சர்மா மிகப் பெரிய ஸ்கோர்களை அடிக்க கூடிய வீரர், இருப்பினும் அவர் இங்கிலாந்து மைதானங்களில் சற்று நேரம் எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். அதேபோல இந்திய கேப்டன் விராட் கோலி, மேட்ச் வின்னர் ரிஷப் பண்ட் மற்றும் இளம் வீரர் கில் இவர்களும் முடிந்தவரையில் தங்களுடைய ஆட்டத்தை சற்று நிதானமாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

எல்லா வகையிலும் சரியான திட்டத்துடன் விளையாடி வரும் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக சரியான திட்டத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இந்திய அணி வெற்றி பெறும் என்று இறுதியாக ராமன் கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *