சௌராஸ்ட்ரா அணிக்கு கேப்டனாக புஜாரா நியமணம் 1

ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணி விளையாடும் முதல் போட்டிக்கு செட்டேஷ்வர் புஜாரா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சி டிராபி 2017-18 சீசன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இதில், சவுராஷ்டிரா அணி தனது முதல் ஆட்டத்தில் அரியானா அணியை சந்திக்க உள்ளது. இப்போட்டி அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சௌராஸ்ட்ரா அணிக்கு கேப்டனாக புஜாரா நியமணம் 2
Greater Noida, India – Sept. 11, 2016: India Blue batsman Cheteshwar Pujara celebrate Double Century against India Red during the Duleep Trophy Final Match at Shaheed Vijay Singh Pathek Sports Complex at Greater Noida, Uttar Pradesh, India, on Sunday, September 11, 2016. EXPRESS PHOTO 11 09 2016.

இதற்கிடையே, சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் ஷாவுக்கு அக்டோபர் 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. எனவே முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார். இதையடுத்து, சவுராஷ்டிரா அணிக்கு கேப்டன் மற்றும் அணியில் விளையாடும் 15 வீரர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரஞ்சி டிராபியில் ஆடும் சவுராஷ்டிரா அணி கேப்டனாக புஜாராவை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சௌராஸ்ட்ரா அணிக்கு கேப்டனாக புஜாரா நியமணம் 3
Greater Noida, India – Sept. 11, 2016: India Blue batsman Cheteshwar Pujara celebrate Double Century against India Red during the Duleep Trophy Final Match at Shaheed Vijay Singh Pathek Sports Complex at Greater Noida, Uttar Pradesh, India, on Sunday, September 11, 2016. EXPRESS PHOTO 11 09 2016.

இதுதொடர்பாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறுகையில், சவுராஷ்டிரா அணியின் கேப்டனான ஜெயதேவுக்கு அக். 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால் அவர், முதல் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார். அவருக்கு பதிலாக சித்தேஷ்வர் புஜாரா கேப்டனாக அணியை வழிநடத்துவார். மேலும் ராபின் உத்தப்பாவும் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார். ரஞ்சி டிராபியின் முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிரா மற்றும் அரியானா அணிகள் மோதுகின்றன என தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தின் முடிவில் முதல் போட்டிக்கான சவுராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டது. அணியின் விவரம் வருமாறு:

செட்டேஸ்வர் புஜாரா (கேப்டன்), ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனத்கட், ஸ்னெல் படேல் (விக்கெட் கீப்பர்), பிரேரக் மன்கட், சிராக் ஜானி, தர்மேந்திர ஜடேஜா, வண்டிட் ஜீவ்ரஜானி, அவி பரோட், கிஷன் பார்மர், கிருஷாங்க் படேல், ஷவுர்யா சனந்தியா, ஹர்திக் ரதோட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *