ஐபிஎல் 2023; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா !! 1
ஐபிஎல் 2023; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

16வது ஐபிஎல் சீசன் நேற்று துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான நிதிஷ் ராணா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், ஆண்ட்ரியூ ரசல், டிம் சவுத்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். அதே போல் மந்தீப் சிங், ரின்கு சிங், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களும் கொல்கத்தா அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் பனுகா ராஜபக்சே, சிக்கந்தர் ரசா, நாதன் எல்லீஸ் மற்றும் சாம் கர்ரான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இது தவிர அர்ஸ்தீப் சிங், ராகுல் சாஹர், ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், மந்தீப் சிங், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, ஜித்தேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கர்ரான், சிக்கந்தர் ரசா, நாதன் எல்லீஸ், ஹர்ப்ரீட் பிரார், ராகுல் சாஹர், அர்ஸ்தீப் சிங்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *