இவரையாடா டி20க்கு செட் ஆகமாட்டாருன்னு அனுப்புனீங்க... வெளுத்துவாங்கிய ஷிகர் தவான்.. பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் குவிப்பு! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி.

கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்று வரும் எட்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இவரையாடா டி20க்கு செட் ஆகமாட்டாருன்னு அனுப்புனீங்க... வெளுத்துவாங்கிய ஷிகர் தவான்.. பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் குவிப்பு! 2

இந்த மைதானம் பேட்டிங் செய்ய நன்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு அணிகளும் அதிக ஸ்கோரை அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே நிலவி வந்தது. அதற்கேற்றவாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க ஜோடி பிரப்சிம்ரன் மற்றும் தவான் இருவரும் முதல் ஓவரிலிருந்து வெளுத்து வாங்கினர்.

அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் 26 பந்துகளுக்கு அரைசதம் அடித்தார். அதன் பிறகும் நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்த இவர், மூன்று சிக்ஸர்கள் 7 பவுண்டர்கள் உட்பட 34 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இவரையாடா டி20க்கு செட் ஆகமாட்டாருன்னு அனுப்புனீங்க... வெளுத்துவாங்கிய ஷிகர் தவான்.. பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் குவிப்பு! 3

அதுவரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த தவான் அதன்பிறகு பேட்டிங்கை அடுத்த கியருக்கு மாற்றினார். முதல் விக்கெட் போனபிறகு உள்ளே வந்த கீப்பர் ஜித்தேஷ் சர்மா 1 சிக்ஸ் 2 பவுண்டரி அடித்து 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

30 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்த தவான், பின்னர் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும்.

இவரையாடா டி20க்கு செட் ஆகமாட்டாருன்னு அனுப்புனீங்க... வெளுத்துவாங்கிய ஷிகர் தவான்.. பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் குவிப்பு! 4

இறுதி ஆட்டமிழக்காமல் நின்று அணியின் ஸ்கோரை 195+ ரன்களுக்கு எடுத்துச் சென்றார். 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இடத்திற்கு 197 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அதிக ஸ்கோர் அடித்துவரும் இந்த மைதானத்தில் அபாரமாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

198 ரன்கள் எனும் இமாலய இலக்கை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த தொடரின் இரண்டாவது வெற்றியை பெறுமா? அல்லது ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விக்கெட் எடுத்து இந்த இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி கட்டுப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *