விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பாதையில் கம்பீரமாக பயணித்து வந்தாலும், இந்திய அணியிலும் ஸ்ப்லிட் கேப்டன்சி முறையை கொண்டு வர வேண்டும் என்ற கருத்து சமீப காலமாக வலுத்து வருகிறது.
டி.20 போட்டிகள் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை கேப்டனாக நியமித்து, விராட் கோஹ்லியின் பனிச்சுமையை குறைக்கலாம் என்று கருத்தை பல முன்னாள் வீரர்கள் கூறி வரும் நிலையில், தற்பொழுது பிரபல பயிற்சியாளரான டாம் மூடியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாம் மூடி பேசியதாவது;
விராட் கோலி TEST, ODI, T20 ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான முறையில் விளையாடுகிறார், அவரின் பேட்டிங் ஸ்டைல் பலரின் மனதை கவர்ந்து இழுக்கிறது அவரின் அபரிவிதமான பார்ம் பலரையும் வியக்க வைத்துள்ளது,மேலும் அவரது கேப்டன்ஷிப் மிகவும் சிறப்பாகவே உள்ளது அவர் வழிநடத்திக் கொண்டிருக்கும் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது.

இருந்தாலும் அவர் மூன்று விதமான போட்டிகளிலும் தலைமை தாங்கிக்கொண்டு விளையாடுவது அவருக்கு பணிச்சுமையே ஆகும் இதனால் அவரால் பிற்காலத்தில் சிறப்பாக செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவர் தனது பணிச் சுமையை நீக்கி ரோஹித் சர்மாவிடம் பகிர்ந்தால் அது அவரின் கேரியருக்கு மிகச் சிறப்பான ஒன்றாகிவிடும். நான் விராட் கோலி இன்னும் சிறப்பாக சிறிதுகாலம் விளையாட வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன் என்றும் அவர் கூறினார்.

விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஒரு சிறந்த கேப்டனும் ஆவார்.அவர் பல சாதனைகளை முறியடித்துள்ளார் இன்னும் முறியடிப்பதற்காக காத்துக் கொண்டுள்ளார், இருந்தபோதும் அவர் மூன்று விதமான போட்டிகளிலும் தலைமை தாங்குவது அவருக்கு பணிச்சுமை யாகவே உள்ளது. அணியை தலைமை தாங்கிக் கொண்டும் பேட்டிங்கில் சிறப்பாக பங்களித்து கொண்டும் இருப்பது மிகவும் கடினமான ஒன்று எனவே டாம் மூடி அவ்வாறு கூறியுள்ளார். விராட் கோலி தலைமையைப் பற்றி ஏற்கனவே பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறியிருந்த போதும் டாம் மூடி கூறியது கவனத்திற் கொள்ள வேண்டியதாக உள்ளது.