குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: பைனலுக்குள் நுழையப்போவது யார்? 1
Photo by Vipin Pawar / IPL / SPORTZPICS

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை இரு அணிகளும் குவாலிபைர் 1 போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டம், எந்த அணிக்கு சாதகம் மற்றும் சாத்திய கூறுகளை இங்கு காண்போம்.

வெற்றி பெரும் அணி நேரடியாக பைனலுக்குள் செல்லும். தோல்வியை தழுவும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் நாக் அவுட் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபைர் 2 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெரும் அணி. பைனலில் குவாலிபைர் 1 போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி 9 ஆண்டுகளாக மும்பை அணியை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியிலும் மும்பை அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் பலத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் மும்பை அணி, நிச்சயம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: பைனலுக்குள் நுழையப்போவது யார்? 2

அதேபோல, இத்தனை ஆண்டு கால மோசமான சாதனையை சென்னை அணி நிச்சயம் முறியடித்து வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் அனல் பறக்கும்.

மும்பை அணிக்கு எதிராக ரெய்னா மற்றும் தோனி இருவரும் கடைசி 7 போட்டிகளில் 61.50 மற்றும் 51 சராசரியை கொண்டுள்ளனர். மறுபுறம், பொல்லார்ட் மற்றும் ரோஹித் இருவரும் 36.33 மற்றும் 16.43 சராசரியுடன் தடுமாறி வருகின்றனர்.

சென்னை அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்த சீசனில் ஸ்பின்னர்கள் 79.2 ஓவர்கள் வீசி 30 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இது சென்னை அணிக்கு பெரும் பலம் சேர்க்கும்.

நேருக்கு நேர்

போட்டிகள் – 26

சென்னை – 11

மும்பை – 15.

பிளே ஆப் சுற்றில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் சென்னை அணி 4 முறையும், மும்பை அணி 3 முறையும் வென்றுள்ளது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: பைனலுக்குள் நுழையப்போவது யார்? 3

கணிப்பு

2013 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளன. அதில் 3 முறை மும்பை அணியிடம் என்பதால், இன்றைய போட்டியிலும் மும்பை அணியே வெல்லும் என கணிக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *