குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 1

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை இரு அணிகளும் குவாலிபைர் 1 போட்டியில் மோதுகின்றன.

இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக பைனலுக்குள் செல்லும். தோல்வியை தழுவும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் நாக் அவுட் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபைர் 2 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெரும் அணி. பைனலில் குவாலிபைர் 1 போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

முதல் குவாலிபைரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டியில், சென்னை அணியில் ஆடும் கணிக்கப்பட்ட 11 வீரர்கள் இதோ.

#1 டூ பிளசிஸ்;

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 4 ரன்களில் சதம் வாய்ப்பை நழுவ விட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 2

#2 ஷேன் வாட்சன்;

தொடர்ந்து சொதப்பி வந்த சேன் வாட்சன் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடினார். அதே போன்று இன்றைய போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 3

#3 சுரேஷ் ரெய்னா;

சென்னை அணிக்கான தனது பங்களிப்பை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகவே செய்து வரும் சுரேஷ் ரெய்னா அடுத்தடுத்து இரு அரைசதங்கள் அடித்து சிறப்பான நிலையில் உள்ளார்.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 4

#4 அம்பத்தி ராயுடு;

தடுமாறி வரும் ராயுடு, தனது முன்னாள் அணிக்கு எதிராக நன்கு செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்ப முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 5

#5 முரளி விஜய்;

கெதர் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் முரளி விஜய் களமிறக்கப்படலாம். துவக்க வீரராகவும் சரி, நடுவரிசையிலும் நன்றாக ஆடுவார் என்பதால் இந்த மாற்றம் எதிர்பார்க்கபடுகிறது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 6

#6 எம் எஸ் தோனி ;

கடந்த முறை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக இவர் ஆடாததால், சென்னை படுதோல்வி அடைந்தது. இம்முறை அதற்க்கு தக்க பதிலடி கொடுக்க திட்டங்கள் இவரிடம் இருக்கும் என தெரிகிறது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 7

#7 ரவீந்திர ஜடேஜா;

சீனியர்  ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டால் அது எதிரணிக்கு கூடுதல் நெருக்கடியே.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 8

#8 டூவைன் பிராவோ;

ஆல் ரவுண்டரான டூவைன் பிராவோ மும்பை அணிக்கு எதிராக எப்போது நன்றாக செயல்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் அவரது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 9

#9 ஹர்பஜன் சிங்;

சூழலில் கலக்கும் ஹர்பஜனை சென்னை மைதானத்தில் மட்டுமே துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது சென்னை அணி. இன்றைய போட்டியிலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 10

#10 தீபக் சாஹர்;

பவர் பிளே ஓவர் ஸ்பேசிலிஸ்ட் ஆக மாறியுள்ள சஹார், முதல் 6 ஓவர்களுக்குள்ளேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துள்ளார். இது சென்னை அணிக்கு பலமுறை வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளது.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 11

#11 இம்ரான் தாஹிர்;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து வரும் இம்ரான் தாஹிர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டால் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: சென்னை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!! 12

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *