சென்னையை சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மின்சாரம் அல்லாத புதுவித பந்துவீச்சு மெஷினை அறிமுகப்படுத்தி அதன் செயல்திறனை பற்றிய பார்வையாளர்களுக்கு விளக்கமும் கொடுத்தார். இந்நிகழ்வு சென்னையில் விளையாட்டு அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது.
“ஒரு கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்கு பந்துவீச்சு மெஷின் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் அது பெரும்பாலும் பந்தை உள்ளே வைத்து வீச மற்றொரு நபரைக் கண்டறிவது கடினம்”, அஸ்வின் கூறினார்.
மின்சாரம் கூட தேவை இல்லாத இந்த பந்துவீச்சு மெஷினை எளிதில் மடக்கியபடி செய்யுவர்களும் எடுத்து செல்லலாம். இது பயிற்சியாளர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். காரணம், பயிற்சியின்போது 400 முதல் 500 பந்துகள் வரை ஒரு செசனில் வீச வேண்டும்.
இந்தவகை மெஷினில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், உண்மையான கிரிக்கெட் பந்துகளையும் கொண்டு இதில் பயன்படுத்த முடியும். மற்றவர்களில், சின்தடிக் வகைபந்துகளை மட்டுமே உபயோகிக்க முடியும் சர்வதேச கிரிக்கெட் வகை பந்துகளை உபயோகிக்க இயலாது.
மின்சார வகை பந்துவீச்சு மெஷினில் பந்து சற்று சேதமாக வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் இந்த வகை மெஷினில் அப்படி எந்த ஒரு அறிகுறியும் இருக்காது.
ஆதலால், தங்குதடையிண்டு பேட்ஸ்மேன் சிறப்பான முறையில் பயிற்சிபெறலாம். ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசுவதை போன்ற அனுபவத்தை கொடுக்கும். சுழற்பந்து வீச்சு, ரிவர் ஸ்விங், வேகப்பந்துவீச்சு என அனைத்து வகையும் இதில் உண்டு.
இதை ஜாம்பவான் ராகுல் டிராவிட், சித்தேஸ்வர் புஜாரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பரிசோதித்துள்ளனர் என அஸ்வின் தெரிவித்தார்.
நான்கு டெஸ்ட் சதங்களை அடித்துள்ள அஷ்வின், “இது என் பேட்டிங் மேம்படுத்த சில ஆண்டுகள் என்னை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கப்போவதுடன், அடுத்த கட்டத்திற்கு எனது பேட்டிங்கை கொண்டு செல்லும் என நான் நம்புகிறேன்”, என்றார்.