Cricket, India, Rajinikanth, Ravi Ashwin

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என மனமுடைந்த தீவிர ரசிகர் தற்கொலை முயற்சி செயதது கண்டித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட் செய்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என சென்றுவிட்டார்.

ashwin-rajiniஇந்நிலையில், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஏழுமலை என்ற ரஜினி புரூஸ்லி (46) தீவிர ரஜினி ரசிகர். அப்பகுதியில் ‘நாட்டுக்கொடு நல்லவன்’ என்ற ரஜினி ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதால் அங்கு கேக் வெட்டி கொண்டாடினார்.

ரஜினி ரசிகரின் செய்கைக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டனம்! 1
Ravichandran Ashwin of India with the match ball during day five of the 4th Paytm Freedom Trophy Series Test Match between India and South Africa held at the Feroz Shah Kotla Stadium in Delhi, India on the 7th December 2015
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

அப்போது அவரது உறவினர்களும், நண்பர்களும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிப்பும் வெளியிடப்படவில்லையே என கேலி செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஏழுமலை இரு தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரின் மனைவி மகேஸ்வரி வெளியே சென்ற நேரம் பார்த்து பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

Cricket, Ravichandran Ashwin, India, Indian Sports Honours 2017, Virat Kohli

வீட்டுக்கு வந்து பார்த்த மகேஸ்வரி, ஏழுமலையை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

“Suicide because your favourite star doesn’t enter politics??? ��this Trend is scary to say the least, it’s tough but surely one day all this must come to a halt.” என ட்வீட் செய்தார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் , “தன்னுடைய அபிமான நட்சத்திரம் அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற செயல்களை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

அஸ்வினின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *