ரபாடாவிற்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த பஞ்சாப் அணி!! எத்தனை கோடிக்கு எடுக்கப்பட்டார் தெரியுமா?? 1

காகிசோ ரபாடா 9.25 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

15வது ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பான, பெங்களூருவில் மெகா ஏலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று முன்னணி வீரர்களை எடுப்பதற்கு முழு முனைப்புடன் பங்கேற்று வருகிறது. ஷிகர் தவான், ஹர்ஷல் பட்டேல், ரபாடா, ஸ்ரேயாஸ் அய்யர், சிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் கோடிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றனர். எதிர்பார்த்ததைவிட இவர்களுக்கு அதிக கோடிகள் கொடுத்து அணிகள் எடுத்திருக்கின்றன.

ரபாடாவிற்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த பஞ்சாப் அணி!! எத்தனை கோடிக்கு எடுக்கப்பட்டார் தெரியுமா?? 2

சென்னை அணியை பொறுத்தவரை பெரிதளவில் முனைப்பு காட்டவில்லை. இதுவரை ராபின் உத்தப்பா மற்றும் டிவைன் பிராவோ இரு வீரர்களை மட்டுமே எடுத்திருக்கிறது. இவர்கள் இதற்கு முன்னதாக சென்னை அணியில் விளையாடியதால் உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறது என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேநேரம் டு ப்லஸ்ஸிஸ் 7 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணிக்கு சென்றிருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா, சென்னை அணியில் ஆரம்ப கட்டம் முதல் விளையாடி வந்த ஒருவராக இருந்தாலும் இம்முறை அவரை சென்னை அணி எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக எந்த அணியும் எடுக்கவில்லை.

ரபாடாவிற்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த பஞ்சாப் அணி!! எத்தனை கோடிக்கு எடுக்கப்பட்டார் தெரியுமா?? 3

ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் முதல் வீரராக அறிவிக்கப்பட்ட தவான், பஞ்சாப் அணிக்கு 8.25 கோடிக்கு எடுக்கப்பட்டார். அதற்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த காகிசோ ரபாடா பஞ்சாப் அணியால் 9.25 கோடிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். பஞ்சாப் அணி ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஹர்ஷல் பட்டேல் 10.75 கோடி ரூபாய்க்கு எடுத்ததே அதிகபட்சமாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக ககிசோ ரபடா 9.25 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு சென்றது அதிகபட்சமாக இருக்கிறது.

ரபாடாவிற்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த பஞ்சாப் அணி!! எத்தனை கோடிக்கு எடுக்கப்பட்டார் தெரியுமா?? 4

கடந்தமுறை டெல்லி அணியில் விளையாடிய தவான் மற்றும் ரபாடா இருவரும் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டிருக்கின்றனர். பஞ்சாப் அணிக்கு இன்னும் மீதம் 60 கோடிக்கும் மேல் இருக்கிறது. தற்போது வரை நான்கு வீரர்கள் மட்டுமே அந்த அணியில் இருக்கின்றனர்.

ஐபிஎல் ஏலம் விடுபவர் துரதிஸ்டவசமாக மயக்கம் அடைந்ததால், ஏலம் பாதையில் தடைபட்டது. அவர் நல்ல குணம் அடைந்து வருவதால், வேறொருவரை வைத்து ஏலம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *