சாரே கொல மாஸூ… நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் ரச்சின் ரவீந்திராவை கம்மி விலைக்கு தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

சாரே கொல மாஸூ… நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் ரச்சின் ரவீந்திராவை கம்மி விலைக்கு தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 1.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில் பட் கம்மின்ஸ், ஸ்டார்க் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரிய டர்வீஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க முயற்சித்து இறுதியாக பின்வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்து அணியின் எதிர்காலமாக கருதப்படும் ரச்சின் ரவீந்திராவை வெறும் 1.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அசத்தியுள்ளது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்த ரச்சின் ரவீந்திரா தனது அடிப்படை விலையாக 50 லட்சத்தை நிர்ணயித்திருந்தார். ரச்சின் ரவீந்திரா இந்த ஏலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம் போவார், பல அணிகளும் அவருக்காக போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிய போட்டி ஏற்படாததால் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 1.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்துள்ளதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

Mohamed:

This website uses cookies.