JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

“என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என விண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் மனமுறுகி பேசியுள்ளார்.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் அண்மையில் காவல்துறையினா் அரங்கேற்றிய தாக்குதலினால்  கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

"என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! 1

காவல்துறையினரின் இத்தகைய கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் மினியாபொலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் நாடுமுழுவதும் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் குவிக்கப்பட்டது.

இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களது எதிர்ப்பு மற்றும் கருத்தினை வெளியிட்டு வருகின்றனர். விண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் தனக்கு நடந்த இனவெறி தாக்குதல் குறித்து பேசியதுடன், கருத்தினையும் கூறினார்.

"என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! 2

அவர் கூறுகையில், “மற்றவர்களைப் போல கருப்பின மக்களின் வாழ்க்கையும் முக்கியமானது தான். கருப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் அவ்வப்போது இதுபோன்ற செயல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. நான் உலகம் முழுக்கச் சுற்றியுள்ளேன். நான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் மீது இன வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிலகாலம் இதற்காக வருத்தப்பட்டுள்ளேன்.

இன வெறுப்பு, கால்பந்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுள் கருப்பினத்தவன் என்பதால் கடைசி வாய்ப்பு தான் கிடைக்கும். ஆனால், அவர்கள் ஒன்றை மட்டும் உணர விரும்புகிறேன். கருப்பே சக்திமிக்கது, கருப்பினத்தவனாக இருந்து பெருமை கொள்கிறேன்.” என்றார்.

"என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! 3

இந்தியாவில் வெகுசிலரிடம் இருந்து மட்டுமே கருப்பின தாக்குதலுக்கான எதிர் குரல் வெளிப்பட்டுள்ளது. பலர் இதற்க்கு மவுனம் காத்துவருவது வருத்தம் அளிக்கிறது.

இதற்கிடையில், கிறிஸ் கெயில் ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத நாடு ஆஸ்திரேலியா. இங்கு 70,000க்கும் அதிகமானவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் விரைவாக குணமடைந்து வருகின்றனர். இதனால் உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்குத் தயாராகும் வகையில் டேவிட் வார்னர், மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்டோர் ஆளில்லாத சிட்னி மைதானத்தில் நேற்று முதல் பயிற்சியை துவக்கினர். • SHARE
 • விவரம் காண

  இந்திய கிரிக்கெட் அணியின் பலமே இவர்கள்தான், விராட், ரோகித் இல்லை: முன்னாள் வீரர் தாக்கு

  இந்திய கிரிக்கெட் அணிக்கு வலுவான பந்துவீச்சு சக்தி இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஏதர்டன் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் ஆஸ்திரேலியா -...

  பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...