நான்காவது இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 1

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி மூன்று டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. பின் அதிரடியாக களம் இறங்கிய இந்திய அணி டி20 போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது.

வருகிற டிசம்பர் 17 ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தாயகம் திரும்ப உள்ளார்.

நான்காவது இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 2

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.விராட் கோலிக்கு இல்லாத இந்திய அணியை அஜிங்கிய ரஹானே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஜிங்கியா ரஹானே எந்த இடத்தில் களம் இறங்குவார் என்ற விவாதம் சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரஹானே 4வது இடத்தில் தான் இறங்குவார் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

நான்காவது இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 3

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருவரும் இதுபற்றி விவரித்தனர்.

நான்காவது இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 4

சுனில் கவாஸ்கர் கூறியதாவது விராட் கோலி இல்லாத இந்திய அணியில் ரஹானே 4-வது இடத்தில் களம் இறங்குவார், அதற்குப்பின் கேஎல் ராகுல் அல்லது சுப்மன் கில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்க அதிகம் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

நான்காவது இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 5

கேஎல் ராகுல் இந்த ஆண்டு மிகச்சிறந்த பார்மில் உள்ளார் இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவார் என்று அவர் கூறினார் மேலும் சுப்மன் கில் பற்றி அவர் கூறியதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இவர் பங்கேற்ற இரண்டு போட்டியில் 43 மற்றும் 65 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *