"நான் தூங்கிட்டு இருந்தேன்" வாழ்த்துக்கள் மெசேஜ் பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்: ராகுல் சஹார் ஓபன் டாக் 1

முதன் முறையாக சர்வதேச இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார்.

உலகக்கோப்பை தொடரை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது இந்திய அணி. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 8 போட்டிகளில் ஆட இருக்கிறது.

இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை கடந்த 21ம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் எம் எஸ் கே பிரசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு என தனித்தனியே வெளியிட்டார். அதில் ராகுல் சஹார், நவ்தீப் செயலி, கலீல் அஹமது ஆகிய புதுமுகங்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கு அணியில் இடமளிக்கப்பட்டது.

"நான் தூங்கிட்டு இருந்தேன்" வாழ்த்துக்கள் மெசேஜ் பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்: ராகுல் சஹார் ஓபன் டாக் 2

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு சுழற்பந்துவீச்சில் அசத்திய இளம் வீரர் ராகுல் சஹார் முதல் முறையாக சர்வதேச இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். டி20 அணியில் இடம்பெற்றுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில், முதல் முறையாக இடம் பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார் ராகுல் சஹார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “நான் அப்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். எனது மொபைல் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. எழுந்துப் பார்க்கையில் ஒரே வாழ்த்துக்கள் மெசேஜ் ஆக இருந்தது.

"நான் தூங்கிட்டு இருந்தேன்" வாழ்த்துக்கள் மெசேஜ் பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்: ராகுல் சஹார் ஓபன் டாக் 3

அதன் பிறகு தான் நான் உணர்ந்தேன் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளேன் என்று. நான் இன்று நடப்பது குறித்து எப்போதும் யோசிப்பேன். இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்ததால், அது குறித்து மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த தொடரில் நன்றாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அணி அறிவிப்பை முற்றிலுமாக மறந்துவிட்டேன்.

திடீரென இந்திய அணியில் இடம் கிடைத்த போது என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற வீரர்களும் அன்று முழுவதும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி என்னை நிரூபித்துக் காட்ட முயல்வேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *