டி20 உலககோப்பையை வெல்வதற்கு ராகுல் டிராவிட் வைத்திருக்கும் பலே பிளான்! - ஆனால் அதற்கு பிசிசிஐ உதவவேண்டுமாம்! 1

ஒரு வாரத்திற்கு முன்னரே ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் எங்களுக்கு இதை மட்டும் செய்து கொடுங்கள் என பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய பேச்சுக்கள் கிரிக்கெட் உலகில் நாளுக்காக அதிகமாகிக் கொண்டே வருகின்றன. ஆஸ்திரேலியாலில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரை குறிவைத்து பல்வேறு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் எதற்கு எப்படி சாதகமாக இருக்கும் என்பது பற்றிய ஆலோசனைக்கு பிறகு, அதற்கு ஏற்றார்போல வீரர்களின் தேர்வு அமைந்திருக்கிறது. இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு முழு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்கிற வகையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் இருக்கின்றனர்.

டி20 உலககோப்பையை வெல்வதற்கு ராகுல் டிராவிட் வைத்திருக்கும் பலே பிளான்! - ஆனால் அதற்கு பிசிசிஐ உதவவேண்டுமாம்! 2

ஆனாலும் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு சற்று பற்றாக்குறையாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியில் ரிசர்வ் வரிசையில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் என நான்கு பேர் எடுக்கப்பட்டிருக்கின்றனர். தேவைக்கு ஏற்ப தொடரில் நடுவிலேயே இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இந்தியாவில் தலா மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரில் விளையாடிவிட்டு அதன் பிறகு தென்னாபிரிக்க அணியிடம் இந்திய அணி விளையாடுகிறது. கடைசி டி20 போட்டி அக்டோபர் நான்காம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுகிறது.

டி20 உலககோப்பையை வெல்வதற்கு ராகுல் டிராவிட் வைத்திருக்கும் பலே பிளான்! - ஆனால் அதற்கு பிசிசிஐ உதவவேண்டுமாம்! 3

உலகக் கோப்பைத் தொடர் துவங்குவதற்கு ஒரு வார காலம் முன்னுரெ இந்திய அணி புறப்படுவதால் மீதமுள்ள நாட்களில் பயிற்சி போட்டிகளை அதிகரிக்கும்படி பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் ராகுல் டிராவிட். இது குறித்து அவர் கூறுகையில்,

“தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியை முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலம் முன்னரே நாங்கள் புறப்படுகிறோம். எனது கணிப்பின்படி, அக்டோபர் ஐந்தாம் தேதி நாங்கள் இங்கிருந்து கிளம்புவோம். ஐசிசி ஏற்கனவே பயிற்சி போட்டிகளை திட்டமிட்டு வைத்திருக்கிறது. ஆனாலும் அது போதாது என்பதால் கூடுதலாக பயிற்சி போட்டிகள் வேண்டும் என்று பிசிசியிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம். மற்றசில அணிகளிடமும் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். ஆஸி., மைதானம் மற்ற நாடுகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால் இன்னும் அதிகமான பயிற்சி தேவை என்ற கோணத்தில் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். பிளேயிங் லெவனில் யாரை எப்படி விளையாட வைக்க வேண்டும் என்ற திட்டமும் அதன் அடிப்படையில் இருக்கும்.” என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டார்.

இந்திய அணிக்கு இது மிக முக்கியமான உலக கோப்பை ஆகும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எவ்வித ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த உலகக்கோப்பை நிச்சயமாக இருக்கும் என்கிற கருத்தையும் அவர் மறைமுகமாக கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *