பார்சிலோனா சென்று மெஸ்ஸியின் ஆட்டத்தை கண்டுகளித்த ராகுல் டிராவிட்!!! 1

ராகுல் டிராவிட், பார்சிலோனா மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் ஆகிய அணிகளுக்கு இடையே கேம்ப் நோவில் நடந்த லா லிகா போட்டியில் பங்கேற்று கண்டுகளித்தார். பின்னர் அணி நிர்வாகம் இவரை சிறப்பித்து வழியனுப்பியது.

முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய U-19 பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் , பார்சிலோனா மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் ஆகிய அணிகளுக்கு இடையே கேம்ப் நோவில் நடந்த லா லிகா போட்டியில் பங்கேற்று கண்டுகளித்தார். இந்த போட்டியை பார்சிலோனா அணி 2-0 என வென்றது. போட்டி முடிந்த பின்னர் பார்சிலோனா அணி தலைவர் டிராவிட் க்கு பிரத்தியேக பார்சிலோனா ஜெர்சி ஒன்றை பரிசளித்தார்.

பார்சிலோனா சென்று மெஸ்ஸியின் ஆட்டத்தை கண்டுகளித்த ராகுல் டிராவிட்!!! 2

இது குறித்து டிராவிட் கூறுகையில், “இது நம்பமுடியாதது, அது ஒரு பெரிய கௌரவமாகும். கேம்ப் நோவ் வந்து ஒரு கால்பந்து விளையாட்டைப் பார்ப்பது நான் எப்போதும் செய்ய விரும்பியவற்றில் ஒன்றாகும். இங்கே இருக்க மற்றும்நிகழ்வை அனுபவிக்க மிக்க சந்தோசமாக இருக்கிறது. மெஸ்ஸி மற்றும் சுரேஸ் போன்ற விளையாட்டு வீரர்களை நேரடியாக பார்க்க முடிந்தது எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் மிக மகிழ்ச்சி என்றார்.

டிராவிட் ஐந்து முறை பாலென் டி’ஓர் வென்ற லியோனல் மெஸ்ஸி கண்டு ஆச்சரியமடைந்தார். “அவர் ஒரு முழுமையான மேதை. அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கவும், ஆட்டத்தின் யுக்தியையும் கண்டு வியக்கிறேன். இவரை போல ஒரு உலகத்தரம் மிக்க வீரரை நான் கண்டதே இல்லை. பார்க்க பார்க்க வியப்பை மட்டுமே அளிக்கிறார் மெஸ்ஸி” அர்ஜென்டினா விளையாட்டு வீரர் மெஸ்ஸி குறித்து டிராவிட் கூறினார்

“கிரிக்கெட் ஒரு வித்தியாசமான விளையாட்டு. ஐபிஎல் போட்டிகளில் ஒரு பெரிய சூழ்நிலையும், ஒரு பெரிய கூட்டமும், டெஸ்ட் போட்டிகளும் நிறைய உள்ளன. கிரிக்கெட் இந்தியாவில் No.1 விளையாட்டு. ஆனால், கால்பந்து மிகவும் விரைவாக அந்த இடத்தைபிடிக்க இருக்கிறது. “

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *