ராகுல் டிராவிட்டுக்கு மாத்தி மாத்தி பேசுறதே வேலையாப்போச்சு... நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசுறாரு - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாடல்! 1

நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒருவிதமாக கூறிவிட்டு, இன்றைய பேட்டியில் வேறு விதமாக பேசுகிறார் என்று ராகுல் டிராவிட்டை சரமாரியாக சாடியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடர்களில் நன்றாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட் தொடரிலும் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது.

ராகுல் டிராவிட்டுக்கு மாத்தி மாத்தி பேசுறதே வேலையாப்போச்சு... நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசுறாரு - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாடல்! 2

துரதிஷ்டவசமாக ஒருநாள் தொடர்களில் வங்கதேசம் மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற தோல்வி இந்தியாவில் பெற்றவை என்பதால் கூடுதல் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஏனெனில் இந்த வருடம் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவின் நடக்கிறது. இந்தியா பெறும் ஒவ்வொரு தோல்வியும் மிகவும் கவனிக்கப்படும்.

இந்நிலையில் வெற்றிக்கு பெருமிதமாக பேசும் ராகுல் டிராவிட், தோல்விக்கு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு விதமாக பேசிவிட்டு, அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்படியே தலைகீழாக பேசுகிறார் என்று சல்மான் பட் சாடினார்.

ராகுல் டிராவிட்டுக்கு மாத்தி மாத்தி பேசுறதே வேலையாப்போச்சு... நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசுறாரு - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாடல்! 3

“ராகுல் டிராவிட் முதலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போது, இந்திய அணி குறித்து கருத்து தெரிவிக்கையில், அணியில் பல்வேறு வீரர்களை பயன்படுத்தி சரியான பிளேயிங்-லெவனை தேர்வு செய்ய திட்டமிட்டு வருகிறோம் என்றார். அதற்கு அடுத்த நாள் வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவோம் என்று பேசுகிறார்.

இதில் எதை ரசிகர்கள் எடுத்துக் கொள்வது. உண்மையில் அவருக்கே என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமாக இருக்கிறது. இதில் அணியில் இருக்கும் பேட்டிங் பிரச்சினையை எப்படி சரி செய்வார்? இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், டிராவிட் குழப்பத்தில் இருந்து வெளிவர வேண்டும்.” என கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராகுல் டிராவிட்டுக்கு மாத்தி மாத்தி பேசுறதே வேலையாப்போச்சு... நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசுறாரு - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாடல்! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *