இங்கிலாந்தை சமாளிப்பது மிக கடினமானது; ராகுல் டிராவிட் சொல்கிறார் !! 1

இங்கிலாந்தை சமாளிப்பது மிக கடினமானது; ராகுல் டிராவிட் சொல்கிறார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்து வெற்றி பெறவைப்பதில் வல்லவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டிற்காக உழைத்து கொண்டிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்து, மிகச்சிறந்த இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்தை சமாளிப்பது மிக கடினமானது; ராகுல் டிராவிட் சொல்கிறார் !! 2

இங்கிலாந்து தொடர் மற்றும் ஆசிய கோப்பை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், இங்கிலாந்தில் பேட்டிங் ஆடுவது எளிதான காரியம் அல்ல; கடினமானது தான் என்பதை உண்மையாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். நானும் இங்கிலாந்தில் ஆடியிருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்கள் கடினமானவை. ரன் குவிப்பதற்கு சிரமமானவைதான். ஆனால் அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு ஆடத்தான் வேண்டும். இரு அணிகளின் பேட்ஸ்மேன்களுமே பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். கோலியை தவிர்த்துவிட்டு பார்த்தால் நமக்கு அது புரியும்.

இங்கிலாந்தை சமாளிப்பது மிக கடினமானது; ராகுல் டிராவிட் சொல்கிறார் !! 3

இங்கிலாந்து தொடர் போன்றவை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கும். எனவே ஒருமுறை தோற்றுவிட்டால், மீண்டும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால் இதுபோன்ற தொடர்களில் தோற்பது வருத்தமாகத்தான் இருக்கும். இந்திய அணி சில போட்டிகளில் வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவியது. அதனால் அடுத்த முறை இங்கிலாந்து செல்வதற்கு முன் போதிய பயிற்சிகளுடன் செல்ல வேண்டும். இந்த முறை சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. இந்திய அணியின் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. தோற்றது பரவாயில்லை. ஆனால் தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் மிக முக்கியம். இங்கிலாந்து தொடர் குறித்து ரவி சாஸ்திரி என்ன சொன்னார் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என்று ராகுல் டிராவிட் கூறினார்.

மேலும் ஆசிய கோப்பை குறித்து பேசிய டிராவிட், ஆசிய கோப்பையில் இந்திய அணியின் கவனம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் மீதே உள்ளது. அது தவறு. ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடிவருகிறது. எனவே பாகிஸ்தான் மீது மட்டுமே மொத்த கவனத்தையும் செலுத்தாமல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும் என டிராவிட் எச்சரித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *