ஐபிஎல் தொடரின் 49 வது போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இப்போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மோத இருக்கின்றன.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
பெங்களூர் அணி கிட்டத்தட்ட ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இருப்பதால் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் நல்ல ரன்ரேட் விகிதத்தில் வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆப் சுற்றுக்கு உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, தங்களது அணியில் ஒரே ஓரு மாற்றத்தை செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வீரர் அஷ்டன் டர்னர் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய முதல் தர வீரர் மஹிபால் லெமோரேர் களமிறங்குகிறார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியின் மூலம் அறிமுகம் ஆகிறார்.
பெங்களூரு அணிக்கு பவன் நேகி இன்றைய போட்டியில் ஆடுகிறார். மேலும், சிவம் துபே க்கு பதிலாக குல்வந்த் கெஜோலிரியா இன்றைய போட்டியில் அறிமுகம் ஆகிறார். 2 மாற்றங்களை செய்துள்ளது பெங்களூரு அணி..
இன்றைய போட்டியில் ஆடும் அணி வீரர்களின் பட்டியல் இதோ.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோஹ்லி (கேட்ச்), ஏபி டி வில்லியர்ஸ், ஹென்ரிக் கிளாசென், குர்கீரத் சிங் மன், மார்கஸ் ஸ்டோனிஸ், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவடிப் சைனி, குல்வந்த் கெஜோலிரியா, யூசுவெந்திர சஹால்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
அஜிங்கியா ரஹானே, லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சூ சாம்சன், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபல் லோம்ரோர், ஷீரியாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட்கட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்