மும்பை அணிக்கு இவர்தான் புதிய கோச்! அதிரடி முடிவை எடுத்த நிர்வாகம்
மும்பை அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வருகிறார் விஜய் ஹசாரே தொடரிலிருந்து தனது பணியை தொடர்வார் என்றும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களான சையது முஸ்தக் அலி மற்றும் விஜய் ஹசாரே ஆகிய இரண்டு தொடர்களும் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்த தொடரில் மும்பை அணி எதிர்பார்த்த அளவிற்கு திறம்பட செயல்படவில்லை. ஈ பிரிவில் இடம்பெற்று கடைசி இடத்தையே பெற்றது. இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மும்பை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பக்னிஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அடுத்து வரும் தொடர்களில் ரமேஷ் பவார் புதிய பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. பகனிஷ் கடந்த டிசம்பர் 17-ம் தேதி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதத்திற்குள் அவரது செயல்பாடு அணி நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்காத வண்ணம் இருந்ததால் தற்போது புதிய பயிற்சியாளரை மும்பை அணியில் நியமித்திருக்கிறது.

ரமேஷ் பவார் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் இதற்கு முன்னதாக இந்திய மகளிர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் சில அணிகளில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு இருப்பதால் மும்பை நிர்வாகம் நம்பிக்கை வைத்து நியமித்திருக்கிறது. இவர் வருகிற விஜய் ஹசாரே தொடரிலிருந்து மும்பை அணியின் முழுநேர பயிற்சியாளர் ஆக தொடருவார்.
வருகிற 20 ஆம் தேதி விஜய் ஹசாரே தொடர் துவங்க இருக்கிறது. இதைக்கான அணி வீரர்களின் பட்டியல் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது. அதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக மும்பை நிர்வாகம் புதிய பயிற்சியாளர் முடிவை எடுத்து நியமனமும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.