இந்த இரண்டு வீரர்களும் உடனடியக ஓய்வு பெற வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

இந்த இரண்டு வீரர்களும் உடனடியக ஓய்வு பெற வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார்

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் முகமது ஹபீஸ், சோயிப் மாலிக். 40 வயதை தொட இருக்கும் இருவர்களும் பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்குப்பின் ஓய்வு பெற விருப்பம் என முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு வீரர்களும் உடனடியக ஓய்வு பெற வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மரியாதையாகவும், மனதாரவும் வெளியேற வேண்டும். இருவரும் பாகிஸ்தான் அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடியுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது அவர்கள் இருவரும் மனதார பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

அவர்கள் இருவரும் தற்போது ஓய்வு பெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நான் சிறந்த வீரர்களை தயார் செய்துள்ளோம். அவர்களை முன்னேற்ற வேண்டும்’’ என்றார்.

இந்த இரண்டு வீரர்களும் உடனடியக ஓய்வு பெற வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் டி20 அணியில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *