இலங்கை அணியின் தற்போதய மோசமான நிலைமையை பார்த்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இலங்கை அணியை ஏளனம் செய்து கருத்து கூறியுள்ளார். இக்கருத்தை ஏளனமாக கூறினாரா இல்லை கேளியாக கூறினாரா என்பது அவருக்கே வெளிச்சம். முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பேட்ட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து இலங்கை அணியை தூண்டுவதாக அமைந்துள்ளது.
அவர் கூறியதாவது,
இந்தியாவின் உயர்மட்டத்தில் உள்ள எந்த ஒரு ரஞ்சி கோப்பை அணி கூட தற்போது உள்ள இலங்கை அணியை எளிதாக வீழ்த்திவிடும். மும்பை , வங்காளம் , டெல்லி போன்ற அணிகள் கூட இலங்கையை வீழ்த்தும் வகையில் தற்போது துஉள்ள இல்ங்கை அணி மோசமான நிலைமையில் ள்ளது. இது டெஸ்ட் போட்டியே அல்ல. -சுனில் கவாஸ்கர்
மேலும் பல்வேறு தரப்பினரும் இந்திய இலங்கை போட்டிகள் குறித்து தங்களது அதிருப்த்தியை வெளிபடுத்தியுள்ளனர். வர்ணணையாளர் சஞ்சய் மாஜரேக்கரும் இது போன்ற ஒரு கருத்தை கூறி தனது அதிருப்த்தியை வெளிபடுத்தியுள்ளார். அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நல்ல சவாலான அணிகளுடன் போட்டியை ஏற்பாடு செய்ய இந்திய கேப்டன் விராட் கோலி வலியுருத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் முகமது கைப் உம் இந்திய இலங்கை இடயே நடக்கும் போட்டிகள் சர்வதேச போட்டிகள் அல்ல அது கிட்ட தட்ட உள்ளூர் போட்டியை போன்றது தான் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் ஆகாஷ் சோப்ராவும் , இதன் பெயர் டெஸ்ட் போட்டி, ஆனல் சிறிது கூட இந்திய டெஸ்ட் செய்யப்ப்டவில்லை என கேளி செய்து தனது ட்விட்டர் பக்கஹ்ட்தில் பதிவிட்டுள்ளார்.
ஏன் இந்த ஏளனம் :
இலங்கை கிரிக்கெட் அணிக்கு நல்ல காலமே இல்லை போலும். அடிக்கு மேல் அடியாக வாங்கி கொண்டு வருகிறது.கடந்த இரு சீசனில் பலத்த அடி வாங்கி தற்போது வரை அடி வாங்கி வருகிறது. ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ததில் இருந்து ஆரம்பம் ஆனது இந்த அடி வாங்கும் படலம்.
பின்னர் 2017ஐ தென்னாப்பிரிக்கா உடன் ஒரு நாள் தொடரை 5 – 0 என்ற கணக்கில் மறுபடியும் மொதல்ல இருந்தா என தொடங்கி இன்னும் அந்த சனி அவர்களை விட்ட பாடில்லை. அதே இடத்தில் வைத்து டி20 போட்டியிலும் 3 – 0 என்ற கணக்கில் நசுக்கப்பட்டது. மேலும் பங்களாதேஷ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்று அந்த அணிக்கு சோகத்தை ஏற்ப்படுத்தியது. அது போக சாம்பியன்ஸ் டிராபி முதல் சுற்றிலேயே வெளியே வந்தது.
சமீபத்தில் ஜீம்பாப்வே அணியுடனான 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் தோற்றது. அதன் பிறகு கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.
இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது.
இந்தியா இலங்கை இடயேயான 3வது டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றை நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியால் 487 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி இரண்டே மணி நேரத்தில் 135 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் ஃபாலோ ஆன் செய்து 333 ரன்கள் பின்னடைவில் தற்போது 1 விக்கெட் இழப்பிற்க்கு இரண்டாவது நாள் ஆட்டத்தை முடிவு செய்திருக்கிறது.
இது போன்ற மோசமான நிலைமையில் இருந்து வருகிறது. இலங்கை கிரிக்கெட் மென்மேலும் தன்னை மேம்படுத்த வேண்டி உள்ளது. இது போன்ற மோசமான நிலைமையினாலேயே இது போன்ற எதிர் மறையான கருத்துக்களை கூறுவதும் குறிப்பிடத்தக்கது.