B பிரிவு போட்டியில் ராஜஸ்தான் அணியை 50 ஓவருக்கு 153 ரன்னில் ஆல் அவுட் ஆனது. குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிண்டா கஜா சிறப்பாக பந்து வீசினார். 15 ஓவர் வீசிய 7 ஓவர் மெய்டன் ஓவர் வீச 40 ரன் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார் சிண்டா கஜா.
ராஜஸ்தான் அணிக்கு, அதிக பட்சமாக 54 பந்தில் 45 ரன் அடித்தார் தஜிந்தர் சிங். ஆட்டநேர முடிவில் 37.5 ஓவர் விளையாடிய குஜராத் அணி 90 ரன்கள் அடித்து, 63 ரன் பின் தங்கியுள்ளது.
A பிரிவில் நடந்த போட்டியில், டெல்லி அணி பேட்டிங் விளையாடிய போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கவுதம் கம்பிர் 9 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னில் அவுட் ஆனார். நான்கு நாள் நடக்கும் ரஞ்சி டிராபி தொடரின் ஐந்தாவது சுற்றில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 260 ரன் அடித்துள்ளது டெல்லி அணி.
A பிரிவு –
டெல்லி vs மகாராஷ்டிரா
முதல் நாள் ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 62 ஓவரில் 260/4 ரன்னில் இருக்கிறது.
மகாராஷ்டிரா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிராக் குரானா 21 ஓவர் வீசி 2 விக்கெட் எடுத்தார்.
டெல்லி அணிக்கு நிதிஷ் ராணா சதம் அடிக்க, ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் ஆனார்.
உத்தரபிரதேசம் vs கர்நாடகா
90 ஓவர் விளையாடிய கர்நாடக அணி 327 ரன்னில் இருக்கிறது. தேகா நிஸ்சால் 221 பந்துகளில் 90 ரன்னில் விளையாடி கொண்டிருக்க, 63 (79) ரன்னில் விளையாடி கொண்டிருக்கிறார் மனிஷ் பாண்டே.
அசாம் vs ஐதராபாத்
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து 289 ரன்னில் விளையாடி கொண்டிருக்கிறது ஐதராபாத் அணி. அசாம் அணி தரப்பில் அரூப் தாஸ் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் தலா மூன்று விக்கெட் எடுத்துள்ளார்கள்.
B பிரிவு –
குஜராத் vs ராஜஸ்தான்
முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் அணி 153 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, 37.5 ஓவரில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்னில் இருக்கிறது.
ஜம்மு & காஷ்மீர் vs ஹரியானா
45 ஓவர் விளையாடிய ஹரியானா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்னில் இருக்கிறது. முகமது முதாஸிர் நான்கு விக்கெட் எடுக்க, அவரது பார்ட்னர் ராம் தயா 18 ஓவரில் மூன்று விக்கெட் எடுத்தார்.
கேரளா vs சவுராஷ்டிரா
முதல் இன்னிங்சில் 78 ஓவர் விளையாடி 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது கேரளா அணி. முதல் நாள் முடிவில் 10 ஓவருக்கு 37 ரன் அடித்து 1 விக்கெட் இழந்துள்ளது சவுராஷ்டிரா.
C பிரிவு –
பரோடா vs ஒடிசா
முதல் நேர ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 281 ரன் அடித்துள்ளது பரோடா அணி.
ஆந்திர[பிரதேசம் vs மும்பை
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவருக்கு 248 ரன் அடித்து 6 விக்கெட் இழந்துள்ளது மும்பை அணி.
தமிழ்நாடு vs மத்தியபிரதேசம்
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர் விளையாடிய மத்தியபிரதேசம் அணி 7 விக்கெட் இழந்து 224 ரன் அடித்துள்ளது.
D பிரிவு –
பஞ்சாப் vs பெங்கால்
முதல் இன்னிங்சில் 145 ரன்னில் பஞ்சாப் அணி சுருண்டது. ப்ரமணிக் மற்றும் அமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்கள்.அடுத்தது விளையாடிய பெங்கால் அணி 21 ஓவர் விளையாடி விக்கெட் ஏதும் பறிகொடுக்காமல் 71 ரன் அடித்துள்ளது.
கோவா vs விதர்பா
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 93.4 ஓவர் விளையாடிய கோவா அணி 239 ரன் அடித்துள்ளது.
சட்டிஸ்கர் vs சர்விசஸ்
முதல் இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது சட்டிஸ்கர். சர்விசஸ் பந்துவீச்சாளர் டிவேஷ் பத்தானியா நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய சர்விசஸ் அணி 12 ஓவரில் விக்கெட் ஏதும் பறிகொடுக்காமல் 39 ரன் அடித்துள்ளார்கள்.