தற்போது இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது. இதற்கான அடுத்த சுற்றுக்கு ராஜஸ்தான் அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது. இதற்கான போட்டியில் குஜராத் அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஜேஸ்ப்ரிட் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் விளையாட உள்ளார்கள். இந்திய அணியில் இடம் பெற்றிருந்ததால், குஜராத் அணிக்காக முதல் நான்கு போட்டிகளில் அவர்களால் விளையாட முடியவில்லை. இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இவர்கள் இல்லை என்பதால், குஜராத் அணிக்காக விளையாட உள்ளார்கள்.
இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங்கும் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இது வரை இந்த ரஞ்சி டிராபியில் ஆர்.பி சிங் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த இரண்டு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் வருவது, குஜராத் அணி வலுவாகவே காணப்படும். கடந்த மூன்று போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய், இரண்டு ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதனால், ஆர்.பி சிங் மற்றும் பும்ரா வருவது இவருக்கும் நம்பிக்கை அளிக்கும்.
புள்ளி பட்டியலில் தற்போது 20 புள்ளிகளுடன் குஜராத் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், குஜராத் அணி இன்னொரு வெற்றியை பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
குஜராத் அணிக்கு தொடக்க வீரராக விளையாடி வரும் ப்ரியன்க் பஞ்சால், ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியின் போது இந்த சீஸனின் தனது முதல் சதத்தை அடித்தார். அந்த போட்டியில் அவர் 145 ரன் அடித்தார், ஆனால் சவுராஷ்டிரா அடித்த 570 ரன்னை சேஸ் செய்த குஜராத் அணி பக்கம் வந்து வெற்றியை தவற விட்டது. இதனால் செதேஸ்வர் புஜாரா தலைமையிலான சவுராஷ்டிரா அணி மூன்று புள்ளிகளை பெற்றது.
கடந்த போட்டியின் போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி, ஆர்.பி சிங், ஜேஸ்ப்ரிட் பும்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் வந்துள்ளதால், கண்டிப்பாக அடுத்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் நோக்கத்தில் இருப்பார்கள்.