இந்த வருட ரஞ்சி கோப்பை தொடருக்கான பணிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை வித்தியாசமாக நடக்கும் ரஞ்சிக் கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்ற.ன மேலும் பாண்டிச்சேரியில் இருந்து புதிய அணியும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 6 புதிய அதிகம் கலந்துகொள்கிற.
தற்போது ஒவ்வொரு மாநிலமும் தங்கள் வீரர்கள் தயார் படுத்தி வருகின்றது இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் தனது 30 பேர் கொண்ட உத்தேச அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த பட்டியலில் முன்னாள் இந்திய அணி வீரரும் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீரும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்தின் (132 ரன், நாட்-அவுட்) உதவியுடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்தியா 3 விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. தவான், ராகுல் மற்றும் புஜாரா வரிசையாக வெளியேறினர். ஆண்டர்சன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். இதனிடையே கேப்டன் கோலியும், ரகானேவும அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்க, அரை சதம் கண்டிருந்த கோலி (58 ரன்கள்), மொயீன் அலி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ரிஷாப் பாண்ட் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி ரகானேவை மலை போல் நம்ப, அவரும் 51 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.