என்னோட அடுத்த டார்கட் டெஸ்ட் போட்டி தான்... ரஞ்சி தொடரில் அடித்து துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் !! 1
என்னோட அடுத்த டார்கட் டெஸ்ட் போட்டி தான்… ரஞ்சி தொடரில் அடித்து துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ்

ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் தொடர்களில் முக்கிய தொடரான ரஞ்சி டிராபி கடந்த 13ம் தேதி துவங்கியது.

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பி-பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை – ஹைதராபாத் இடையேயான போட்டி 20ம் தேதி துவங்கியது.

மும்பையின் பாந்தராவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

என்னோட அடுத்த டார்கட் டெஸ்ட் போட்டி தான்... ரஞ்சி தொடரில் அடித்து துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு, அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ப்ரித்வி ஷா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 195 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை போன்றே இந்த போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து கொடுத்தார். நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரஹானே 190 பந்துகளில் 139* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 457 ரன்கள் எடுத்துள்ளது.

என்னோட அடுத்த டார்கட் டெஸ்ட் போட்டி தான்... ரஞ்சி தொடரில் அடித்து துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் !! 3

இந்தநிலையில், இந்த போட்டியில் ஜெய்ஸ்வால், ரஹானே போன்ற வீரர்கள் சதம் அடித்து அசத்தியிருந்தாலும், சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணியில் பல வருடமாக நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்த்து வைத்து தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவிற்கு விரைவாக இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *