கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 1

இந்திய விளையாட்டு வீரர்களின் வாழக்கை வரலாறு படமாகும் ட்ரெண்ட் தற்போது அதிகமாக வருகிறது. முதலில் அசாருதினில் துவங்கி சச்சின், தோனி , குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி வரை நீழ்கிறது அந்தப் பட்டியள்.

கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 2

தற்போது அந்த பட்டியளில் லேட்டெஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில் தேவ். ஆம அவ்ரது வாழ்க்கையை வைத்து 1983 உலகக்கோப்பை வெல்லும் வரை படம் எடுக்கப்படவுள்ளது.

இந்த வாழக்கை வரலாற்றுப்படத்தை இந்தி திரை உலகின் இயக்குனர் கபிர் கான் இயக்குகிறார். அந்த படத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.

அடுத்த வருட (2018) துவக்கத்தில் இந்த படத்தில் படப்பிடிப்பு ஆரம்பாமாகவுள்ளது. படத்திற்க்கு ‘1983’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதனைப்பற்றி பட இயக்குனர் கபிர் கான் கூறியதாவது,

இந்த படத்தை எடுக்கத்தான் இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன். எனது சிறுவயதில் அந்த 1983 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியைப் பார்த்து பிரமித்தேன். அப்போது எனக்குத் தெரியவில்லை, அந்த போட்டி தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றியமைக்கப் போகிறது என.

படத்தில் தலைப்பு ‘1983’ ஆகும். படத்தின் கதை எழுத்ப்பட்டுவிட்டது. இதற்க்கு கபில் தேவ் பாத்திரத்தில் நடிக்க மிகவும் பொருத்தமானவர் ரன்விர் சிங் தான்.

1983 இறுதி போட்டி தான் இந்திய கிரிகெட்டை மாற்றி அமைக்கப் போகிறது என எத்தனை பேர் கண்டிருப்பார்கள். அந்த இறுதிப் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.

கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 3

அந்த இறுதிப் போட்டி இந்தியாவிற்கு முதல் இறுதிப் போட்டியாகும். ஆனால், மேற்க்கிந்திய தீவுகள் அணி அதற்க்கு முன்னர் நடந்த இரண்டு உலகக்கோப்பையையும் வென்ற அணி.

அப்படி ஒரு வலிமை வாய்ந்த அணியை எதிர்கொண்டது கத்துக்குட்டி இந்திய அணி. 60 ஒவர் போட்டி அது, முதலில் பேட்டிங் செய்த கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 4

இந்திய அணி தரப்பில், மொகிந்தர் அமர்னாத் 26 ரன்னும், தமிழக வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் 38 ரன்னும் அடித்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆக்ரோச பந்து வீச்சாளர்களான ஆண்டி ராபர்ட்ஸ், மல்கோம் மார்சல், ஜோல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், லார்ரி கோம்ஸ் போன்றவரகளை சமாளிக்க முடியாமல் 183 ரன்னுக்கே சுருண்டது கத்துக்குட்டி இந்திய அணி.

ஆனாலும், மணம் தளராத இந்திய அணி கபில் தேவ் தலைமையில் ஆக்ரோசமாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை 52 ஓவர்களுக்கு 140 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் கொடியை பறக்க விட்டது.

கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 5

அதிரடி வீரர் விவியன் ரிசர்ட்சின் விக்கெட்டை வீழ்த்தியது கபில் தேவ். ரிச்சர்ட்ஸ் அப்போது அதிரடியாக 28 பந்துகளுக்கு 33 ரன் எடுத்து அணியை கரை சேர்க்க பாடுபட்டு வந்தார்.

ஆட்ட நாயகனாக ஆல்-ரவுண்டர் மொகிந்தர் அமர்னாத் தேர்வு செய்யப்பட்டார். 7 ஒவர்கள் வீசிய அவர் 12 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

கபில் தேவின் இந்தி திரைப்படம், ரன்விர் சிங் கதாநாயகன்!! 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *