ஆப்கானிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னர் ரஷீத் கான், தனது சக ஐபில் அணி வீரரான ஷிகர் தவான் அயர்லாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
அயர்லாந்துக்கு எதிரானஆட்டத்தில் இந்திய அணி முதல் பேட் செய்து துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. துவக்க வீரர்களாக களம் இறஙகிய தவான் மற்றும் ரோஹித் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதில் இருவரும் அரைசதம் விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது. அஷீரடியாக ஆடிய தவான் 45 பந்துகளில் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின் கெவின் ஓ பிரைன் பந்தில் அடித்து அவுட் ஆனார்.
மறுமுனையில் நிதானமாகவும் சற்று அதிரடியாகவும் ஆடிய ரோஹித் 3 ரங்களில் சதம் வாய்ப்பை தவறவிட்டார். இவர் 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து சேஸ் பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் டி20 போட்டிகளில் தனது 3வது சதத்தை நழுவவிட்டார்.
இதில் இந்திய அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 132 ரன்கள் எடுத்தது. இறுதியில், இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து ஆப்கான் வீரர் ரஷீத் கான் கூறுகையில், ஷிகர் தவான் ஆடிய ஆட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். ரோஹித் சதம் விளாசுவார் என எதிர்பார்த்தேன் ஆனால் நழுவ விட்டார். வருத்தமளிக்கிறது. ஆப்கான் வீரர்கள் நன்றாக ஆட வேண்டும். இந்திய வீரர்களை வீழ்த்துவது எளிதல்ல என கூறினார்.