ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் சீன் வில்லியம்ஸின் அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெறித்தனமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கம்பேக் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சாகிடி 200 ரன்கள், அஸ்கர் ஆஃப்கன் 164 ரன்கள், இப்ராஹீம் 72 ரன்கள் என வெற்றிதனமாக பேட்டிங் செய்து இருக்கின்றனர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 545 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 287 ரன்கள் மட்டுமே குவித்து. இதைத் தொடர்ந்து பாலோவானில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 365 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர் ரஷித் கான் தனது சிறப்பான பந்தவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் இன்னிஸ்சில் 36.3 ஓவர்களை வீசி 138 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதில் 3 மெய்டன் ஓவர்களையும் வீசியிருக்கிறார். இதையடுத்து இரண்டாவது இன்னிஸ்சில் 62.5 ஓவர்களை வீசி 137 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்களை வீசியிருக்கிறார்.

இதில் 17 மெயிடன் ஓவர்களையும் வீசி இருக்கிறார். இந்த போடாடியில் மட்டும் ரஷித் கான் மொத்தம் 99.2 ஓவர்களை வீசி இருக்கிறார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ஓவர்களை வீசிய வீரர் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 2002ம் ஆண்டு தென்னாப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷேன் வார்ன் 98 ஓவர்களை வீசி இருந்தார். தற்போது அவரது இடத்தை ரஷித் கான் பிடித்துவிட்டார்.