கெத்தான இடத்தில் ஜடேஜா, அஸ்வின்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !! 1

டெஸ்ட் தொடருக்கான சிறந்த வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை சிறந்த பேட்ஸ்மேன் சிறந்த பந்து வீச்சாளர் சிறந்த ஆல்ரவுண்டர் என தனித்தனியே பிரித்து வீரர்களுக்கு மதிப்பெண் கொடுத்து வரிசைப்படுத்தி ஆண்டுதோறும் ஐசிசி பட்டியல் வெளியிடும்.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான சிறந்த வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இதில் சிறந்த பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், 2வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மார்னஸ் லபுசாக்னே, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் 4வது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மாவும் ஆறாவது இடத்தில் 756 புள்ளிகள் பெற்று டேவிட் வார்னரும் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளனர்.

கெத்தான இடத்தில் ஜடேஜா, அஸ்வின்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !! 2
டெஸ்ட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல்

மேலும் சிறந்த பந்து வீச்சாளர்களாக முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் 3வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சகீன் அஃப்ரிடி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கெத்தான இடத்தில் ஜடேஜா, அஸ்வின்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !! 3
டெஸ்ட் தொடரின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல்

மேலும் சிறந்த ஆல்ரவுண்டர்களாக முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மற்றும் 4வது இடத்தில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் 5வது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்களை ஐசிசி வெளியிட்டுள்ள

கெத்தான இடத்தில் ஜடேஜா, அஸ்வின்; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !! 4

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்களுக்கு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *