சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து காலத்திற்கும் ஏற்ப சிறந்த டெஸ்ட் வீரர் இல்லை என்று மிகப் பெரிய கருத்து ஒன்றை பதிவிட்டார். இவரது கருத்து பேச்சு அனைத்து இந்தியர்களையும் கோபப்படுத்தியது.
அதற்கு விளக்கம் தரும் வகையில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிநாடுகளில் அவ்வளவாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் ( ஃபைவ் விக்கெட் ஹால் ) எடுத்தது கிடையாது. அவர் எடுத்த பெரும்பாலுமான ஃபைவ் விக்கெட் ஹால் அனைத்துமே இந்திய மண்ணில் எடுத்தது. மேலும் அஸ்வின் இல்லாத காலத்தில் ரவீந்திர ஜடேஜா அவருடைய இடத்தை நிரப்பினார். மேலும் அஸ்வினை விட அக்ஷர் பட்டேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவற்றின் அடிப்படையில் அஸ்வின் மிகச் சிறந்த டெஸ்ட் வீரர் இல்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
அஸ்வின் ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு பக்கம் அப்படி கூற மறுபக்கம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோனை விட இவர் சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார்.
28 போட்டிகளில் விளையாடி 409 விக்கட்டுகளை ரவிசந்திரன் அஸ்வின் கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவரது பௌலிங் அவரேஜ் 24.69 மற்றும் எக்கானமி 2.82 மட்டுமே. மேலும் அதில் அவர் 30 முறை 5 விக்கெட்
ஹாலும் அதேசமயம் 7 முறை 10 விக்கெட் ஹாலும் கைப்பற்றியுள்ளார். இந்த நம்பர்களை வைத்து பார்க்கையில் அஸ்வின் மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தான் என்று கூறியிருக்கிறார்.
ஜோயல் கார்னர் கூட அவ்வளவு 5 விக்கெட் ஹால் கைப்பற்றியது கிடையாது
மேலும் பேசிய சேப்பல் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடிய தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஜோயல் கார்னர் மிக அற்புதமான வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய நம்பர்களை எடுத்துப் பார்த்தால் அவர் அவ்வளவாக ஒவ்வொருஒவ்வொரு போட்டியிலும் 5 விக்கெட் ஹால் கைப்பற்றியது கிடையாது. இருப்பினும் அவர் தலைசிறந்த வீரர் என்பதை நம்மால் மறுக்க முடியாது.
அதையேதான் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்து வருகிறார், என்னைப் பொறுத்தவரையில் அவர் தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தான். இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் நிச்சயமாக அஸ்வினை மேற்கொள்ள நிறைய பயிற்சி எடுத்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று அக்சர் பட்டேல், அதனாலேயே அவர்கள் அக்சர் படேல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிறைய முறை அவரிடம் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர் என்றும் சேப்பல் விளக்கம் அளித்தார்.