'என்ன நடந்துச்சுன்னு நல்லா தெரியும்' உண்மையை கூறிவிட்டு.. கோஹ்லி-கங்குலி விவகாரத்தில் பஞ்சாயத்து பண்ணும் ரவி சாஸ்திரி!! 1

விராட்கோலி என்னது சொல்லிட்டாரு, இனிமே கங்குலி தான் பேசவேண்டும் என விராட் கோஹ்லி – கங்குலி விவகாரத்தில் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய அணியை சுற்றி தற்போது சர்ச்சைகள் பல நிலவி வருகின்றன. குறிப்பாக விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

'என்ன நடந்துச்சுன்னு நல்லா தெரியும்' உண்மையை கூறிவிட்டு.. கோஹ்லி-கங்குலி விவகாரத்தில் பஞ்சாயத்து பண்ணும் ரவி சாஸ்திரி!! 2

தேர்வுக்குழு அதிகாரிகள் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி இருவரும் விராட்கோலி விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை மற்றும் அவரிடம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இனிமேல் கேப்டன் பொறுப்பில் நீங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். இதனை சமீபத்திய பேட்டியில் விராட்கோலி உறுதி செய்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பேசுபொருள் ஆகியுள்ளது.

விராட் கோலி தனது பக்கம் என்ன நடந்தது என்பதை தெரிவித்துவிட்டார். இதற்கு முழுமையான விளக்கத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி இன்னும் தெரிவிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

'என்ன நடந்துச்சுன்னு நல்லா தெரியும்' உண்மையை கூறிவிட்டு.. கோஹ்லி-கங்குலி விவகாரத்தில் பஞ்சாயத்து பண்ணும் ரவி சாஸ்திரி!! 3

அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் யாரும் மூக்கை நுழைப்பது சரியானது இல்லை. ஏனெனில் உண்மையில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. விராட் கோலி தனது பக்க நியாயத்தை தெரிவித்துவிட்டார். கங்குலி இன்னும் இது குறித்து வாயே திறக்கவில்லை. அவரும் என்ன நடந்தது என தெரிவித்துவிட்டால் மட்டுமே நாம் கருத்து சொல்வது சரியாக இருக்கும். அதுவரை யார் எது கூறினாலும் அது நியாயமானதாக இருக்காது.” என்றார்.

மேலும் பேசிய அவர், “விராட் கோலி என்னை போன்ற மனநிலையைக் கொண்டவர். ஆகையால் இந்திய அணியில் எனக்கும் அவருக்கும் இடையேயான நட்பு நல்ல உறுதியான நிலையில் இருந்தது. அதிக நேரங்களில் நான் யோசிப்பதே அவரும் யோசிப்பார் என்பதால் முடிவுகள் ஒற்றை கருத்தாக இருக்கும். தற்போது ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இடையே பயிற்சியின்போது நல்ல நட்புறவு இருப்பதை என்னால் காண முடிந்தது. இது இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தால் போதுமானது.” என்றார்.

'என்ன நடந்துச்சுன்னு நல்லா தெரியும்' உண்மையை கூறிவிட்டு.. கோஹ்லி-கங்குலி விவகாரத்தில் பஞ்சாயத்து பண்ணும் ரவி சாஸ்திரி!! 4

ரவி சாஸ்திரி விரைவில் மீண்டும் கமெண்டரி செய்ய வருகிறார் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *