இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இதையடுத்து இந்த மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இந்த தொடரில் குல்தீப் யாதவை சேர்க்காதது ஏன் என்று கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. தென்னாப்பிரிக்க பிட்ச், மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்காது. அதனால் அஸ்வின், ஜடேஜாவை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடி 17 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரஹானே. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இந்த நிலைமை தொடருமா என்கிற கவலை இந்திய ரசிகர்களுக்கு உண்டு.
ரஹானே குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் விராட் கோலி ஒரு பேட்டியில் கூறியதாவது:
ரஹானே சமீபகாலமாக நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொண்டுவருவார். தேவைப்படும் நேரத்தில் வீரர்கள் தங்கள் உயரத்தை எட்டுவார்கள். கடினமான காலங்களில் ரஹானே தன்னை நிரூபித்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இந்திய அணியின் பேட்டிங் குறித்து எங்களுக்குக் கவலையில்லை.
துணை கேப்டன் ரஹானே ஃபார்ம் பற்றி கேட்கிறார்கள். வீரர்களுக்கு தடுமாற்றம் இருக்கும். ஏன், விராத் கோலியையே எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் ஆஸ்திரேலியா சென்றபோது அவரால் சரியாக ஆடமுடியவில்லை. ஆனால், அடுத்த தொடரில் சாம்பியன் போல ஆடினார். ரஹானேவும் அப்படித்தான். வெளிநாட்டு பிட்சில் அவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். இலங்கை தொடர் முடிந்த உடனேயே தென்னாப்பிரிக்கா செல்வது கடினம்தான். வீரர்களுக்கு கால அவகாசம் தேவை. இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது’ என்றார்
மேலும், சவால்களைச் சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது இவர்களுக்குத் தெரியும்.
வெளிநாடுகளில் இந்திய அணி மோசமாக விளையாடுகிறது என்கிற குற்றச்சாட்டு எங்கள் மீது உண்டு. அதை மாற்ற வீரர்கள் விரும்புகிறார்கள். அடுத்த ஒரு வருடங்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறியுள்ளார்.