'ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு இவரைப்போன்றே இருக்கும்' ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி!! 1

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் கேப்டன் பொறுப்பும் இப்படித்தான் இருக்கும் என்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

விராட் கோலி இந்திய அணிக்கு மூன்றுவிதமான கேப்டன் பொறுப்பில் இருந்தபோது, தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தவர் ரவிசாஸ்திரி. விராட் கோலி டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தனது டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது ரவி சாஸ்திரியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு எதிர்பாராத வகையில் விராட் கோலியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பும் நீக்கப்பட்டது.

'ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு இவரைப்போன்றே இருக்கும்' ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி!! 2

இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் அணியின் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு மத்தியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிக்கிறார்.

மேலும் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்க வில்லை என்பதால் கேஎல் ராகுலிடம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

'ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு இவரைப்போன்றே இருக்கும்' ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி!! 3

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் கேப்டன் பொறுப்பையும் முன்னால் ஜாம்பவான்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. அவர் கூறுகையில்,

“விராட் கோலியுடன் நான் நீண்ட நாட்கள் பயணித்து உள்ளேன். அதே நேரம் ரோகித் சர்மாவையும் கவனித்து வந்திருக்கிறேன். இந்த வகையில் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு கபில்தேவ் போன்றது. ஆக்ரோஷமாகவும் உற்சாகத்துடனும் மிகவும் தைரியமாகவும் இருக்கும். அதே நேரம் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு சுனில் கவாஸ்கர் போன்றது. மிகவும் நிதானமாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் இருக்கும். கேப்டன் பொறுப்பு கை மாறியதால் யாரும் கவலைப்பட தேவையில்லை. இருவரும் கிரிக்கெட் போட்டிகளை நன்கு உணர்ந்தவர்கள். அணுகுமுறையில் மாற்றம் இருக்கலாமே தவிர, இந்திய அணியின் வெற்றியை நோக்கிய இலக்கு இருவருக்கும் ஒன்றுதான்.” என்று தனது ஒப்பீட்டில் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *