கும்ப்ளே – சாஸ்திரி வெவ்வேறு ஐடியா உள்ளவர்கள் – ஷிகர் தவான்

கதை என்ன?

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்த பிறகு, அந்த பதவிக்கான சரியான ஆள் யார் என்று தேடி வருகிறார்கள். பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே இருக்கும் போது, இந்திய அணி பல வெற்றிகளை ருசித்தது. ஆனால், வீரர்களை அன்பால் கவர தெரியவில்லை. ரவி சாஸ்திரி இந்திய வீரர்களுடன் ஜாலியாக பழகுவார் என்று அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில், அனில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் வெவ்வேறு ஐடியா உள்ளவர்கள் என்று இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகா தவான் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…

சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடங்குவதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் மோதல் என தகவல்கள் வந்தது. இந்திய அறையில் அனில் கும்ப்ளே இருப்பதால் சீனியர் வீரர்கள் யாரும் சந்தோசமாக இல்லை எனவும் தகவல் வந்தது. இதனால், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் கிரிக்கெட் நிர்வாக குழுவிடம் புகார் அளித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில், ஜுன் 20 இரவு, பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருக்கும்போது தன் அனுபவத்தை அனைத்தையும் வெளியே கொண்டுவந்தார்.

விவரங்கள்:

முன்னாள் ஆல் ரவுண்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநருமான ரவி சாஸ்திரி, அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் போட்டி மீண்டும் சூடாகியுள்ளது.

சென்ற வருடமே ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சிலையார் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார் ஆனால் அந்த இடத்தில் அணில் கும்ப்ளேவும் விண்ணப்பித்து இருந்ததால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு அணில் கும்ப்ளேவை தேர்வு செய்தார்கள்.

இதனால் தற்போது ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்க்கு விண்ணப்பிக்க சொல்லி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

தற்போது கும்ப்ளே பதவியிலிருந்து விலகி விட்டதால் அந்தப் பதவிக்கு ரவி சாஸ்திரி போட்டியிடவுள்ளார். ரவி சாஸ்திரி விண்ணப்பித்தால் அவருக்கே பதவி கிடைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

அடுத்தது என்ன?

இதை பற்றி ஷிகர் தவான் பேசியிருக்கிறார். அனில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் வெவ்வேறு ஐடியா உள்ளவர்கள் என்று இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகா தவான் தெரிவித்துள்ளார்.

“கண்டிப்பாக இருவரும் வெவ்வேறு ஐடியா உள்ளவர்கள். தோனி மற்றும் கோலியை எடுத்துக்கொள்ளுங்கள், இருவரும் வெவ்வேறு ஐடியா உள்ள வீரர்கள். ஆனால், இந்தியாவிற்காக முக்கியமான கட்டங்களில் வெற்றி பெற்று தருகின்றனர். அதேதான் இங்கேயும். கும்ப்ளேவுடன் ஒப்பிடும் போது, சாஸ்திரியின் ஐடியா வேறு. இருவருமே சிறப்பாக விளையாடி போதுமான அளவிற்கு இந்திய அணிக்கு வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதுமே மரியாதை கொடுப்பேன்,” என ஷிகர் தவான் கூறினார்.

எழுத்தாளரின் கருத்து:

புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 9 வரை நீட்டியிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஏற்கனவே ஷேவாக், டாம மூடி, லால்சந்த் ராஜ்புத், தொட்ட கணேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களுடன் தற்போது சாஸ்திரியும் இணைகிறார்.

கங்குலி பெரும்பாலும் ஷேவாக்கையே ஆதரிக்க வாய்ப்புள்ளது. சச்சின் ஆதரவாக சாஸ்திரிக்குக் கிடைக்கலாம். எனவே யாருக்கு ஜெயம் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.