உலகக்கோப்பையில் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது இதற்கு தான்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 1

உலகக்கோப்பையில் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது இதற்கு தான்; ரவி சாஸ்திரி ஓபன் டாக்

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.

உலக கோப்பை லீக் சுற்று முழுவதும் நன்றாக ஆடிய இந்திய அணி, அரையிறுதியில் தோற்று வெளியேறியது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரையிறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல் 221 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்திய அணி. இந்திய அணி, அந்த போட்டியில் 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. நான்காம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் ஐந்தாம் வரிசையில் ரிஷப் பண்ட்டும் இறக்கப்பட்டனர். தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

உலகக்கோப்பையில் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது இதற்கு தான்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 2

அடுத்தாவது தோனி இறக்கப்படுவார் என்று பார்த்தால், அப்போதும் தோனி வரவில்லை. ஆறாம் வரிசையில் ஹர்திக் பாண்டியா இறங்கினார். ரிஷப் – பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்ட தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரின் கருத்தாக இருந்தது.

அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் இணைந்து கடுமையாக போராடினர். ஆனாலும் கடைசி நேரத்தில் தோனி, ஜடேஜா ஆகிய இருவரும் ஆட்டமிழந்துவிட்டதால் இந்திய அணி தோல்வியை தழுவி, இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்நிலையில், இதுகுறித்து ஏற்கனவே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துவிட்ட நிலையில், அந்த சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் மீண்டும் அதுகுறித்து ரவி சாஸ்திரியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, கண்டிப்பாக தோனியை முன்கூட்டியே இறக்க முடியாது. அது சரியான செயலாகவும் இருந்திருக்காது. ஏனெனில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தால் போட்டி அப்போதே முடிந்திருக்கும். ஆனால் தோனியை பின்வரிசையில் இறக்கியதால்தான் 48வது ஓவர் வரை நமக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதுவரை நாம் ஆட்டத்தில்தான் இருந்தோம். ஆனால் நூலிழையில் தோனி ரன் அவுட்டாகிவிட்டார்.

உலகக்கோப்பையில் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது இதற்கு தான்; ரவி சாஸ்திரி ஓபன் டாக் !! 3

தோனியின் பலம் என்ன? இதுகுறித்து யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார். தோனியின் பலமே போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதுதான். ஃபினிஷிங் செய்வதுதான் அவரது பலமே. அப்படியிருக்கையில், அவரை பின்வரிசையில் இறக்காமல், எப்படி மேல்வரிசையில் இறக்க முடியும்?

ஜடேஜா அருமையாக ஆடினார். தோனி தனது ஃபினிஷிங் பணியை வெற்றிகரமாக செய்திருப்பார். கடைசி 6 பந்தை யார் வீசுவார், எத்தனை ரன்களை அடிக்க முடியும் என்றெல்லாம் தோனி கணக்கிட்டுத்தான் வைத்திருப்பார். ஆனால் ரன் அவுட்டானதால் போட்டியின் முடிவு மாறிவிட்டதே தவிர, தோனியை பின் வரிசையில் இறக்கியது தவறில்லை என்று சாஸ்திரி தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *